நிலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், சோழன் கொடுத்த சப்ரைஸ் கிப்ட் - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழனின் தோழன் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது நிலா-சோழன் இருவருமே விசாரிக்கிறார்கள். அப்போது அந்த பெண், சோழனின் நண்பனை காதலிக்கவில்லை. ஆனால், சோழன் நண்பன் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார் என்று தெரியவந்தது. உடனே நிலா, விருப்பம் இல்லாமல் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது. பெண்களுக்கு தன் வருங்கால கணவனை நினைத்து சில கனவுகள் இருக்கும்.
அதற்காக நண்பராக பழகும் ஒருவரை கணவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் சொல்வதால் சோழன் தான் சொல்ல வந்த காதலை மறைத்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் சோழன் சோகமாகவே இருந்தார். சேரன் அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே சோழனால் ஜீரணிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்ல நிலா தயாராகி வந்தார். சோழன் சோகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சேரன், நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள். விவாகரத்து வாங்கணுமா? என்று கேட்டார். அதற்கு நிலா, நான் அதில் தெளிவாக இருக்கிறேன். என்னால் சோழன் வாழ்க்கை பாதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினார்கள். கோர்ட்டில் விவாகரத்து வழக்கை நீதிபதி விசாரித்தார். பின் நீதிபதி, நிலா- சோழன் இருவரையும் கவுன்சிலிங் போக சொன்னார். கவுன்சிலிங் போன இடத்தில் நிலாவை விசாரித்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது நிலா, எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். அதற்கு பின் சோழனை தனியாக அழைத்து விசாரித்தார்கள். அப்போது சோழன், எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. நிலா கேட்டதால் தான் தருகிறேன் என்றார். அதற்குப்பின் இருவரையும் உட்கார வைத்து பேசி பார்த்தார்கள். ஆனால், நிலா பிடிவாதமாக விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருந்தார்.
https://www.youtube.com/watch?v=6HoHptvE3bo
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலாவின் பிறந்தநாளுக்காக சோழன், சர்ப்ரைஸ் ஆக கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது சேரன், எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தால் உனக்கு நல்ல பரிசு கொடுத்திருப்பேன் என்கிறார். அதற்கு சோழன், நான் கிப்ட் வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால், மேடம் வாங்குவார்களா? என்று தெரியவில்லை என்கிறார். உடனே நிலா, எதுவாக இருந்தாலும் கொண்டு வந்து கொடுங்கள் என்று சொல்கிறார். பின் சோழன், நிலாவிற்காக வாங்கி வைத்த புடவையை கொடுக்கிறார். அதை நிலவும் கட்டி வந்து காண்பிக்கிறார். சோழன் ரொம்ப சந்தோஷப்படுகிறார்