பல்பு வாங்கிய பல்லவன், உண்மை தெரியாமல் சந்தோஷத்தில் குதிக்கும் சோழன் - அய்யனார் துணை

By subhashini · 4/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தனக்கு தெரிந்த தரகரிடம் பெண் பார்க்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். நிலா தன்னுடைய அம்மா வீட்டில் தீபாவளி பண்டிகையை எப்படியெல்லாம் கொண்டாடுவார் என்று சொல் ர். அதை கேட்ட சோழன், சேரனை சந்தித்து இந்த வருட தீபாவளியை நிலா தன்னுடைய அம்மா வீட்டில் கொண்டாடியதை போல் சிறப்பாக கொண்டாட வேண்டும். நிறைய பலகாரங்கள் எல்லாம் செய்யலாம் என்று சொன்னார். அதற்கு சேரணுமே ஒத்துக்கொண்டார்.

பின் வீட்டில் பலகாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேரன் செய்தார். அதற்கு பின் பட்டாசு, மத்தாப்பு என்று தீபாவளியை அமர்க்களமாக சோழன் வீட்டில் கொண்டாடினார்கள். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு, தன் அம்மா வீட்டில் இருக்கும் நினைவுகள் வந்தது. சோழன் தனக்காக செய்ததை நினைத்து நிலா சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வானதிக்கு கிப்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு போய் பாண்டியன் கொடுத்தார். அதை பார்த்த வானதி ரொம்பவே சந்தோசப்பட்டு அங்கிருந்து சென்றார்.

அய்யனார் துணை:

சேரன் வீட்டில் தீபாவளி பண்டிகையை பலகாரம், பட்டாசு என்று அமர்க்களமாக கொண்டாடினார்கள். நிலா ரொம்ப சந்தோசமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருந்தார். புது துணி போட்டு எல்லோருமே போட்டோ எடுத்து கொண்டார்கள். பின் சோழன், நிலாவுடன் சேர்ந்து தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தல தீபாவளி வித் ஒய்ஃப் என்று போட்டிருக்கிறார். இதை நிலா பார்க்க மாட்டாளா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

பின் நிலா தன்னுடைய மொபைலில் எல்லோரும் அனுப்பி இருக்கும் மெசேஜையும், ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து விடுகிறார். பின் பல்லவன் ஸ்டேட்டஸ் மட்டும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார். ஆனால், சோழன் ஸ்டேட்டஸை பார்த்துவிட்டு எதுவுமே சொல்லவில்லை. இதனால் சோழன், நிலா என்னை காதலிக்கிறார் என்று ரொம்ப சந்தோஷமாகவே தன்னுடைய தம்பிகளிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் போன் செய்த தரகர், உன்னை பெண் பார்ப்பதற்காக வீட்டிற்கு வருகிறார்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு சேரன், நானே பெண் இருக்கும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லி விடுகிறார். அதற்குப்பின் பஸ் ஸ்டாப்பில் நிலா, சோழன், பல்லவன் முகாமில் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த பெண் பல்லவனை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சோழன் சொல்கிறார். உடனே பல்லவன் அந்த பெண்ணிடம் பேச போகிறார். அப்போது அந்தப் பெண், எனக்கு உங்கள் அண்ணனிடம் பேச வேண்டும். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய போன் நம்பர் கிடைக்குமா? என்று கேட்கிறார். யாரை சொல்கிறார் என்று புரியாமல் பல்லவன் அமைதியாக நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full