நிலாவை வெறுப்பேற்ற சோழன் செய்த ரகளை, சேரன் சொன்ன வார்த்தையால் ஷாக்கான தம்பிகள் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் தன்னுடைய முன்னாள் கணவரை வெறுப்பேற்றுவதற்காகவே திருமணம் செய்ய வேண்டும் என்றார் அந்த பெண். இதில் சேரனுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் தன்னுடைய தம்பிகளுக்காக ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் பஸ் ஸ்டாண்டில் காயத்ரி பார்த்து வானதி பயங்கரமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அந்த பெண்ணிற்கு ஓன்றுமே முடியவில்லை. பின் வானதி, நான் தான் பாண்டியனை திருமணம் செய்ய போகிறேன். ஒழுங்கு மரியாதையை இரு என்றெல்லாம் மிரட்டினார். பின் காயத்ரி, நான் பாண்டியனை யார் என்று தெரியாது. நான் சோழனை தான் காதலிக்கிறேன் என்றார்.
காயத்ரி, பாண்டியனை காதலிக்கவில்லை என்று தெரிந்தவுடன் வானதி சந்தோஷப்பட்டார். பின் சோழன் உண்மை தெரியாமல் பாண்டியனை அந்த பெண் காதலிக்கிறார் என்று நிலாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பல்லவன், அந்த பெண் பாண்டியனை காதலிக்கவில்லை. சோழன் அண்ணனை தான் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் நிலாவிற்கு ஷாக் ஆனது. சோழன் இதுதான் சந்தர்ப்பம் என்று நிலாவை வெறுப்பேற்ற அந்த பெண்ணைப் பற்றி விசாரித்தார். பின் சோழன், அந்த பெண்ணை சந்தித்து பேசுகிறேன் என்றார்.
அய்யனார் துணை:
பின் சோழன், அந்த பெண்ணினுடைய பெயரை கண்டுபிடித்துவிட்டேன். காயத்ரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட நிலா, கடுப்பாகி அந்த இடத்தை விட்டு சென்றார். இன்னொரு பக்கம் பெண் வீட்டில் திருமணத்தை பற்றி பேசுவதாக தரகர் சொல்வதால் சேரனுக்கு என்ன செய்வது புரியவில்லை. குழப்பத்திலேயே இருந்தார். வீட்டில் உள்ளவர்களிடமும் சரியாக பேசவும் இல்லை. அதற்குப்பின் சோழன், காயத்ரியை சந்தித்து பேச டிப் டாப்பாக ரெடியாகி கிளம்பினார். இதையெல்லாம் பார்த்த நிலாவிற்கு கோபம் அதிகமாகி சோழனின் தலையைப் பிடித்து சுவற்றில் அடித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழனை அடித்தது போல நிலா கனவு தான் காண்கிறார். பின் சோழன், காயத்ரியை பார்க்க போவதாக வீட்டில் எல்லோரிடமும் சொல்கிறார். அதற்குப்பின் பஸ் ஸ்டாண்டில் சோழன், காயத்ரியிடம் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து நிலாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. ஆனால், எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து ஆட்டோவில் சென்று விடுகிறார் நிலா. இதை பார்த்து சோழன் சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் நிலா வேலை செய்யும் இடத்திற்கு வந்த சேரன், தரகர் சொன்ன பெண்ணை பார்த்து பேசி விட்டு வந்தேன்.
சீரியல் ட்ராக்:
அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். வீட்டில் நீதான் தம்பிகளிடம் சொல்ல வேண்டும் என்கிறார். முதலில் நிலாவிற்கு ஷாக் ஆக இருந்தாலும் சேரன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதற்கு சந்தோஷப்படுகிறார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனை வீடு முழுக்க சுத்தம் செய்ய சொல்கிறார். பின் பல்லவன்- பாண்டியன் எல்லோரையும் வரவைத்து சேரன் திருமணம் பற்றி சொன்ன விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு தம்பிகள் மூவருக்குமே ஷாக்காக தான் இருக்கிறது. இத்துடன் சிறையில் முடிகிறது.