போலீசில் வசமாக சிக்கி கொண்ட சோழன், நிலா எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை

By subhashini · 19/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் நிலா தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து தன்னுடைய புது கம்பெனி திறந்து இருந்தார்கள். அப்போது மகேஷின் நண்பர், நிலா ஒரு ரூபா காசு கொடுக்காமல் ஓனராகிவிட்டார் என்று கிண்டலாக பேசி இருந்தார். அதனால் நிலாவிற்கு கஷ்டமாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் நிலா காசு கொடுக்காமல் புது கம்பெனி நடத்துவதை சொல்லிக் காட்டுகிறார். நிலா வேதனையுடன் வெளியே வந்து விட்டார். பின் நிலா, சோழனிடம் சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டு அழுதார்

சோழன் நிலாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு தன்னுடைய ஓனரை சந்திக்க வந்தார். ஓனர், பணத்தை கட்டு கட்டாக வைத்திருந்தார். அப்போது சோழன், கம்பெனியில் நிலா அவமானப்பட்ட விஷயத்தை சொல்லி 5 லட்ச ரூபாய் பணத்தை கேட்டார். ஓனர், உன்னை நம்பி எவன்டா பணம் தருவான். இந்த பணம் வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. அதற்காகத்தான் எடுத்து வைத்திருக்கிறேன். என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை என்றார். பின் ஓனர் கிளம்பியவுடன் அந்த பணத்தை சோழன் திருடி விட்டார்.

அய்யனார் துணை:

பின் அந்த பணத்தை சோழன், நிலாவை அவமானப்படுத்தியவர்கள் முன்பு கொடுத்தார். நிலாவும் அந்த பணத்தை கொடுத்து பார்ட்னராக சேர்கிறார். பின் நிலா, எப்படி பணம் வந்தது என்றார். சோழன், நான் கடன் வாங்கினேன் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். எல்லோருமே நிலாவிற்காக சோழன் செய்ததை பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலா, எல்லோரிடமும் சோழன் பணம் ஏற்பாடு செய்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த சமயம் பார்த்து சோழனின் ஓனர் வீட்டிற்கு வந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் ஓனர், ஆபீஸில் வைத்த பணத்தை நீ பார்த்தாயா? பணம் எண்ணும்போது நீதான் இருந்தாய். பணத்தை காணவில்லை என்று சொல்கிறார். சோழன், எனக்கு எதுவும் தெரியாது. நான் மட்டும்தான் அங்கு வேலை செய்கிறேனா? என்று சொல்கிறார். வேதனையிலேயே ஓனர் அங்கிருந்து கிளம்புகிறார். வீட்டில் ஓனர் வந்ததை பற்றி கேட்கிறார்கள். சோழன் ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். மறுநாள் காலையில் ஓனர், சோழனை ஆபீஸ்க்கு வரச் சொல்கிறார். பின் ஓனர், சோழன் பணம் திருடிய வீடியோ ஆதாரத்தை காண்பிக்கிறார். சோழன் காலில் விழுந்து தன் ஓனரிடம் மன்னிப்பு கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

ஓனர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின் ஓனர், போலீஸிடம் ஃபோன் செய்து சோழன் மீது புகார் கொடுத்து விடுகிறார். சோழன் போலீஸிடம் கெஞ்சுகிறார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. போலீஸ் சோழனை கைது செய்கிறார்கள். இன்னொரு பக்கம் நிலா- சேரன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து சேரனுக்கு போன் செய்த ஓனர், சோழன் செய்த வேலை எல்லாம் சொல்கிறார். அவமானத்தில் நிலா நிற்கிறார். சேரன் ஷாக் ஆகிறார்.

behindtalkies AMP · Quick view
View full