நிலா கொடுத்த இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன சோழன், கொந்தளிக்கும் ராகவ் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் தம்பிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை கலாய்த்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் நடேசன், நிலாவின் கையில் அடிபட்ட விஷயத்தை வீட்டில் சொன்னார். சேரன், பல்லவன், சோழன் எல்லோருமே பதறிப் போனார்கள். சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் சேரன், இனிமேல் நிலாவை நீயே வேலைக்கு அழைத்து செல் என்று சோழனுக்கு ஆர்டர் போட்டார். இது எல்லாம் பார்த்து நிலாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காக மேட்ரிமனியில் பெண்களை பார்த்து கொண்டு இருந்தார். நிலா, என்ன ஆச்சு? என்று விசாரித்தார். அப்போது சோழன், விவாகரத்தான பிறகு நான் உங்களை நினைத்து சோகத்தில் இருப்பேன். அது வேண்டாம் என்று தான் எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதைக் கேட்டு நிலாவிற்கு கடுப்பாகி உள்ளே சென்று விட்டார். இதெல்லாம் பார்த்து சோழனுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
அய்யனார் துணை:
அடுத்த நாள் நிலா, புது ப்ராஜெக்ட் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று பதட்டத்தில் இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் நிலாவும் பதட்டத்துடன் ஆட்டோவில் ஆபிஸிற்கு வந்தார். பின் ஆபிஸில் ராகவ், ப்ராஜெக்ட் எல்லாம் முடிந்து விட்டதா? ரெடி பண்ணி விட்டீர்களா? காண்பியுங்கள் என்றார். பின் நிலா, தன்னுடைய லேப்டாப்பை எடுக்க போனார். ஆனால், அவருடைய டேபிளில் லேப்டாப் இல்லை. நிலா, லேப் காணவில்லை என்று பதற்றத்துடன் தேடிக் கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நிலாவின் லேப்டாப் காணாமல் போனதால் எல்லா ஆட்டோக்காரரை தேடி அலைகிறார். இன்னொரு பக்கம் ராகவ், லேப்டாப் இல்லாததால் நிலாவை ரொம்ப கடுமையாக திட்டி விடுகிறார். நிலா என்ன செய்வது என்று புரியாமல் பயந்து எமோஷனலாக அழுந்து கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்துச் சோழன், சரியாக லேப்டாப் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். நிலா, தன்னுடைய ப்ராஜெக்ட் நல்லபடியாக முடித்து கொடுத்து விடுகிறார். இதனால் ஆபீஸில் எல்லோருமே நிலாவை பாராட்டுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் சோழனை சந்தித்த நிலா, நன்றி என்கிறார். பின் எப்படி லேப்டாப் கிடைத்த விஷயத்தை சோழன் சொல்கிறார். உடனே நிலா, சோழனை கட்டிப்பிடித்து நன்றி சொல்கிறார். சோழன், நிலா தன்னை கட்டிப்பிடித்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டு வீட்டில் ஒரே அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். சோழனின் தம்பிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எல்லோரும் என்ன நடந்தது என்று கேட்கிறார்கள். சோழன், நிலா செய்ததையே நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.