காயத்ரியின் பிறந்தநாளில் பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன், இனி நடக்கப்போவது என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடுவாரோ என்று பயத்தில் அவருடைய மூன்று தம்பிகளும் பிளான் பண்ணி தூங்காமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்தார்கள். முதலில் பாண்டியன் தான் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சோழன்-பல்லவன் இருவரும் தூங்கிவிட்டார்கள். பின் தன்னுடைய நேரம் முடிந்துவிட்டு சோழனை பாண்டியன் எழுப்பினார். ஆனால், சோழன் எழவே இல்லை. பல்லவநனும் எழுப்ப எழுப்ப நன்றாக தூங்கி கொண்டு இருந்தார். பின் வேறு வழியில்லாமல் வாசலின் கதவில் காலை வைத்து கொண்டு சேரன் வெளியே போக முடியாத அளவு பாண்டியன் தூங்கி விட்டார்.
மறுநாள் காலையில் சேரன், என்ன ஆனது? எதற்காக இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அப்போது பல்லவன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்றார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் சென்றார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்றார். அதற்கு அனீஸ், சந்தாவை பெண் கேட்ட விஷயத்தை பற்றி சோழனிடம் சொன்னார். இதைக்கேட்டு சோழன் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
அய்யனார் துணை:
சேரன், சந்தாவை திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்ததால் சோழனுக்கு தலைகால் புரியவில்லை, சந்தோஷத்தில் வீட்டிற்கு வந்தார். பின் வீட்டில் சேரன், அண்ணன் இப்படி இருப்பதற்கு காரணம் தெரிந்து விட்டது என்று அனீஸ் சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அந்த சமயம் பார்த்து சேரன் வீட்டிற்கு வந்தார். அப்போது சேரனிடம் சந்தாவை பற்றி எல்லோரும் விசாரித்தார்கள். வெட்கத்தில் சேரன் அங்கிருந்து சென்று விட்டார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, மீண்டும் பிரச்சனை என்றால் போன் செய்து பேச மாட்டாயா? எதற்காக இப்படி என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறாய் என்று வழக்கம் போல பாண்டியன் வானதியை மோசமாக திட்டி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி வானதி அங்கு இருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா,சோழன், பல்லவன் மூவருமே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காயத்ரி பார்த்தவுடன் நிலாவை வெறுபேற்ற சோழன் வழக்கம் போல வலிந்து பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது.
https://www.youtube.com/watch?v=69MC_RjP0p8
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலாவை வெறுப்பேற்றுவதற்காக சோழன், நான் காயத்ரி பார்க்கப் போகிறேன் என்று சொல்கிறார். கோபத்தில் நிலா, உள்ளே சென்று விடுகிறார். அதற்குப்பின் காயத்ரியின் பிறந்தநாளுக்கு சோழன் சென்றிருக்கிறார். அங்கு காயத்ரி, இவர்தான் என்னுடைய ஆளு. நான் தான் முதலில் காதல் சொன்னேன் என்றெல்லாம் அறிமுகப்படுத்தி சோழன் கைகோர்த்து நிற்கிறார். சோழனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாம் ஒன்று நினைத்தால் என்னமோ நடக்கிறது என்று ரொம்பவே பதறி போகிறார் சோழன்.