தனக்கு தானே ஆப்பு வைத்த கொண்ட சோழன், பார்ட்டியில் காயத்ரி சொன்ன விஷயம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, மீண்டும் பிரச்சனை என்றால் போன் செய்து பேச மாட்டாயா? எதற்காக இப்படி என்னை ரொம்பவே கஷ்டப்படுத்துகிறாய் என்று வழக்கம் போல பாண்டியன் வானதியை மோசமாக திட்டி இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி வானதி அங்கு இருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் நிலா,சோழன், பல்லவன் மூவருமே பஸ் ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது காயத்ரி பார்த்தவுடன் நிலாவை வெறுபேற்ற சோழன் வழக்கம் போல வலிந்து பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது.
நிலா, பல்லவன் இருவருமே பஸ் ஸ்டாண்டுக்கு போனார்கள். காயத்ரி, சோழனுக்காக காத்துக் கொண்டிருந்தார். சோழன் அவர்களுடன் வரவில்லை என்றவுடன் நிலாவிடம் விசாரித்தார். ஆனால், நிலா எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார். அந்த சமயம் பார்த்துச் சோழன் வந்தார். சோழன், காயத்ரியுடன் பேசுவதை பார்த்து கோபப்பட்ட நிலா அங்கிருந்து ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டார். பின் பல்லவனிடம் சோழன், நிலா என்னிடம் வருவதற்காகத்தான் நான் இப்படி எல்லாம் செய்கிறேன் என்று சொன்னார்.
அய்யனார் துணை:
இன்னொரு பக்கம் நிலா ப்ராஜெக்ட்டை நல்லபடியாக செய்து முடித்ததால் ராகவ் ட்ரீட் கொடுப்பதற்காக லாங் டிரைவ் அழைத்தார். ஆனால், நிலா முடியாது என்றார். இன்னொரு பக்கம் வானதி வழக்கம் போல பாண்டியன் கடைக்கு வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சோழன், உங்கள் இருவருக்கும் இடையே என்ன ஞ்சாயத்து என்றார். அப்போது வானதி, சேரன் திருமணம் தொடர்பாக நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். கோபத்தில் பாண்டியனும் கத்துகிறார். பின் சோழன், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து சண்டை போடாதீர்கள் என்று இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காயத்ரி- சோழன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது காயத்ரி, என்னை வெளியே அழைத்துப் போக மாட்டீர்களா? எனக்கு கிப்ட் எதுவும் தர மாட்டீர்களா? இன்று என்னுடைய பிறந்தநாள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு சோழனுக்கு ஒன்றும் புரியவில்லை. மனதிற்குள் வசமாக மாட்டிக் கொண்டோமே என்று புலம்புகிறார். பின் காயத்ரி, என் வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறேன். நீங்கள் வரணும் என்று சொல்கிறார். சோழனும் எதுவும் சொல்லாமல் சரி என்கிறார். பின் சோழன்- பல்லவன் இருவரும் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த நிலா, ஆபீஸில் நடந்த விஷயத்தை எல்லாம் சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
குறிப்பாக ராகவ் காபி சாப்பிட அழைத்த விஷயத்தையும் சொல்ல, சோழன் கோபப்படுகிறார். அதற்குப்பின் காயத்ரி பர்த்டே பார்ட்டிக்கு போக சோழன் தயாராகுவதற்கு அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பாகிறது. பின் சோழன் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார். அங்கு காயத்ரியின் நண்பர்கள் எல்லோருமே வந்துவிடுகிறார்கள். பின் காயத்ரி தன்னுடைய நண்பர்களிடம் சோழனை அறிமுகம் செய்துவிட்டு கேக் வெட்டுகிறார். சோழன், ஒரு ரோஜா பூவை கொடுக்கிறார். காயத்ரி உண்மையாலுமே காதலிக்கிறார். சோழனுக்கு என்ன செய்வது என்று புரியாமல் பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.