தன் அண்ணனுக்காக சோழன் கொடுத்த வாக்குறுதி, சந்தாவின் அப்பா எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை

By subhashini · 28/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி சமைத்து தருகிறேன் என்று மீண்டும் டார்ச்சர் செய்தார். இதையெல்லாம் பார்த்து நடேசனுக்கு சிரிப்புதான் வந்தது. பாண்டியன் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து போய் நின்றார். இன்னொரு பக்கம் ஒரு ஹோட்டலில் நிலா, சோழன்,சேரன் மூவரும் தங்கி கொண்டார்கள். அப்போது நிலாவின் மொபைலுக்கு வக்கீல் மெசேஜ் ஒன்று அனுப்பினார். அதில், விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வருகிறது. இருவரும் ஆஜராக வேண்டும் என்றார். இதைக்கேட்ட உடன் சோழனுக்கு பயங்கர கடுப்பானது.

சீக்கிரமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும், விவாகரத்து வேண்டாம் என்று சொல்லணும் சோழன் என்றார். ஆனால் நிலா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். சந்தாவின் வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் சேரன் தவித்தார். அப்போது சேரன் மொபைலுக்கு அனீஸ் போன் செய்தார். சேரன், நாங்கள் உங்களுடைய ஊருக்கு வந்து விட்டோம். ஆனால் வீடு தெரியவில்லை என்றார். அனிஷ், நான் உடனே நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என்றார். பின் சிறிது நேரம் கழித்து சேரன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அனிஷ் வந்து விட்டார்.

அய்யனார் துணை:

பின் அனீஸ், வீட்டின் நிலைமை எடுத்து சொல்லி சேரன் குடும்பத்தை அங்கிருந்து அழைத்து சென்றார். வரும் வழியெல்லாம் காடு மேடு வெறும் வறண்ட பாலைவனம் போலவே இருக்கிறது. ஒரு வழியாக சந்தாவின் வீட்டை சேரன் குடும்பத்தினர் அடைந்து விட்டார்கள். அனீஸ் தன்னுடைய வீட்டிற்குள் சேரன் குடும்பத்தை அழைத்துச் சென்றார். சேரனை பார்த்தவுடன் சந்தா அப்பாவின் முகம் மாறுகிறது. ஆனால், சந்தா காணவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சந்தாவின் அப்பா, நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளை வசதியானவர். வீடு வாசல் நிலம் என்று எல்லாம் இருக்கிறது. உங்களுக்கு என்ன இருக்கிறது? அன்றாடம் வேலை செய்து சம்பாதித்தால் தான் உங்களுக்கு காசு. அந்த மாதிரி என் மகள் கஷ்டப்படத் தேவையில்லை என்று சொல்கிறார். நிலா, சந்தாவின் அம்மாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், சந்தா அம்மா கேட்கவே இல்லை. எல்லோருமே சந்தாவின் அப்பாவிடம் பேசுகிறார்கள். ஆனால், அவர் விடாப்பிடியாக இருக்கிறார். சந்தா ரூமுக்குள் ரொம்பவே எமோஷனலாக அழுது கொண்டே இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வானதி சமைத்து தருகிறேன் என்று பெயரில் கொடுமை செய்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து பல்லவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை தப்பித்து விடுகிறார். பாண்டியன், நீ சமைக்க தேவை இல்லை. நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். இருந்தாலுமே வானதி கேட்காமல் செய்து கொண்டிருக்கிறார். பின் சோழன், உங்கள் மகளுக்கு 25 லட்சம் பணம், 30 பவுன் நகையை எங்கள் அண்ணன் போட்டால் நீங்கள் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வீர்களா? என்று கேட்கிறார். சோழன்-நிலா ஷாக் ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் சந்தாவின் அப்பா, ஆறு மாதம் டைம் தருகிறேன். நீங்கள் எல்லாம் கொண்டு வந்தால் என் மகளை திருமணம் செய்து வைக்கிறேன் என்று ஒத்துக்கொள்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full