சோழன் செய்த அட்ராசிட்டி, பல்லவனுக்காக மனம் மாறுவாரா நிலா? விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 1/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழன் வீட்டில் இருந்ததை நினைத்து வருத்தப்பட்டு அழுது கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நிலாவை பார்ப்பதற்காக நடேசன் ஆஸ்டலுக்கே வந்திருந்தார். அப்போது நடேசன், சோழன் செய்ததற்கெல்லாம் காரணம் நான் தான் என்று எல்லாம் உண்மையை சொன்னார். இதனால் கோபப்பட்டு நிலா, நடேசன் திட்டி அனுப்பி விட்டார்.
அதற்குப்பின் வீட்டில் சோழனிடம் யாருமே முகம் கொடுத்து கூட பேசவில்லை. இதனால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி இருந்தார். நிலாவிடம் சோழன் மன்னிப்பு கேட்டார்.

சோழன் பலூன் அனுப்பி நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் கோபப்பட்ட நிலா, சோழனை திட்டி அங்கிருந்து அனுப்பினார். இருந்தாலுமே விடாமல் சோழன் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் இல்லாததால் சோழன் குடும்பத்தை பற்றி அக்கம் பக்கத்தினர் மோசமாக பேசி இருந்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னிடம் நன்றாக பேசாமல் கடைக்கு வருபவர்களிடம் நன்றாக சிரித்து பேசுவதால் கோபப்பட்டு வானதி சண்டை போட்டார். இதனால் கோபத்தில் பாண்டியன் வானதியைத் திட்டி அனுப்பி விட்டார். நிலா வீட்டில் இல்லாததால் வருத்தத்தில் பல்லவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.

அய்யனார் துணை:

நிலா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சேரன் போன் செய்து நிலாவிடம் விசாரித்தார். நிலாவுமே எதுவும் பிரச்சனை என்று சொன்னார். உடனே சேரன், உனக்கு எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு வந்துவிடுமா என்று சொன்னார். அதற்குப்பின் நிலாவிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதி ஹாஸ்டலில் கொடுத்துவிட்டு சோழன் சொன்னார். இதை நிலாவின் தோழிகள் அவரிடம் கொடுத்து சோழனை மன்னிக்க சொல்லி கேட்டார்கள். நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் பல்லவனுக்கு அதிகமாக உடம்பு சரியில்லாமல் போனது.

கடந்த வாரம் எபிசோட்:

சோழன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு எங்கேயோ சென்று விட்டார். இதனால் கோபப்பட்டு சேரன், பாண்டியன் இருவருமே பல்லவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து போனார்கள். அப்போது வீட்டிற்கு வந்த சோழன், என்னானது என்று கேட்டார். கோபப்பட்டு பாண்டியன், சோழனிடம் சண்டை போனார். அதற்குப் பின் நிலாவிற்கு ஃபோன் செய்த பல்லவன், எனக்கு உடம்பு சரியில்லை. தயவு செய்து வீட்டிற்கு வந்து விடுங்கள் அண்ணி என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். நிலா எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவனை பார்ப்பதற்கு நிலா வீட்டுக்கே வருகிறார். நிலாவை பார்த்தவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பல்லவன், இங்கேயே இருங்கள். நீங்கள் இல்லாததால் எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிட்டது என்றெல்லாம் சொல்கிறார். அதற்கு நிலா, நான் உன்னை பார்த்துவிட்டு போகிறேன் என்கிறார். அதற்குப்பின் நிலா வேலைக்கு கிளம்புகிறார். அவருக்கு துணையாக சோழன் வருகிறார். அப்போது சோழன், நீங்கள் வீட்டிற்கு வந்து விடுங்கள்.

சீரியல் ட்ராக்:

நான் வேண்டுமென்றால் வீட்டை விட்டு போகிறேன் என்று ஏதேதோ பேசி நிலாவை சமாதானம் செய்யப்பார்க்கிறார். ஆனால், நிலா எதுவும் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் சோழன் பேசிய விஷயங்களால் நிலா சிரித்து விடுகிறார். அதற்குப்பின் நிலா, துணிகளை எல்லாம் எடுத்துக்கொண்டு பழையபடி வீட்டிற்கு வந்து விடுகிறார். இதை பார்த்து சோழன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அப்போது நிலா, சோழனை பார்த்து எப்போ வீட்டை விட்டு போவீர்கள் என்று கேட்கிறார். சோழனும் சமத்திக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full