விவாகரத்து கேட்டு பிடிவாதம் பிடிக்கும் நிலா, காதலை சொல்ல முடியாமல் தத்தளிக்கும் சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சோழன் இருவருமே சந்தோஷமாக விளையாடினார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் பீச்சில் குடிப்பதால் போலீஸ் அவரை திட்டி வார்னிங் கொடுக்கிறார்கள். இதனால் சோழன் குடும்பத்தினர் நடேசனை திட்டினார்கள். மறுநாள் காலையில் நிலா ஸ்கூட்டி ஓட்டுவதற்கு சோழனை அழைத்துக்கொண்டு போனார். அதற்கு பின் பல்லவன், நிலா இருவரும் வேலைக்கு கிளம்பு போது வானதியின் அண்ணன் வழி மறைத்து நிலாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி விட்டார். இதனால் கோபப்பட்டு பல்லவன் அவர்களை அடிக்க போக, நிலா தடுத்து விட்டார்.
வானதி அண்ணன் சொன்னதை நினைத்து பல்லவன் கோபப்பட, நிலா வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவரை சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனை சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து பிரிந்தார்கள். இன்னொரு பக்கம் சோழன் விவாகரத்து நினைத்து வேதனையில் இருந்தார். அப்போது சோழனுக்கு போன் செய்த வக்கீல், விவாகரத்து பற்றி சொன்னார். பின் சோழன், நிலாவிடம் தன் காதலை சொல்ல பீச்சிற்கு அழைத்து சென்றார். அப்போது சோழன், நான் உங்களை மனைவியாக தான் பார்க்கிறேன் என்று சொன்னதால் நிலா ஷாக் ஆனார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சோழன் தன் மனதில் இருக்கும் காதலை சொன்னார். அதற்கு நிலாவும் ஒத்துக்கொண்டார். கடைசியில் அது சோழன் கண்ட கனவு. அந்த சமயம் பார்த்து சோழனின் தோழன் ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது நிலா-சோழன் இருவருமே விசாரிக்கிறார்கள். அப்போது அந்த பெண், சோழனின் நண்பனை காதலிக்கவில்லை. ஆனால், சோழன் நண்பன் காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார் என்று தெரியவந்தது. உடனே நிலா, விருப்பம் இல்லாமல் ஒருவரை கட்டாயப்படுத்த முடியாது. பெண்களுக்கு தன் வருங்கால கணவனை நினைத்து சில கனவுகள் இருக்கும்.
நேற்று எபிசோட்:
அதற்காக நண்பராக பழகும் ஒருவரை கணவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் சொல்வதால் சோழன் தான் சொல்ல வந்த காதலை மறைத்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் சோழன் சோகமாகவே இருந்தார். சேரன் அவருக்கு சாப்பாடு ஊட்டி விட்டு ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே சோழனால் ஜீரணிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு செல்ல நிலா தயாராகி வந்தார். சோழன் சோகத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள். விவாகரத்து வாங்கணுமா? என்று கேட்கிறார். அதற்கு நிலா, நான் அதில் தெளிவாக இருக்கிறேன். என்னால் சோழன் வாழ்க்கை பாதிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு இருவரும் கிளம்புகிறார்கள். கோர்ட்டில் விவாகரத்து வழக்கை நீதிபதி விசாரிக்கிறார். பின் நீதிபதி, நிலா- சோழன் இருவரையும் கவுன்சிலிங் போக சொல்கிறார். கவுன்சிலிங் போன இடத்தில் நிலாவை விசாரிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது நிலா, எனக்கு சேர்ந்து வாழ விருப்பமில்லை. தயவு செய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்கிறார். அதற்கு பின் சோழனை தனியாக அழைத்து விசாரிக்கிறார்கள். அப்போது சோழன், எனக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. நிலா கேட்டதால் தான் தருகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் இருவரையும் உட்கார வைத்து பேசி பார்க்கிறார்கள். ஆனால், நிலா பிடிவாதமாக விவாகரத்து வாங்குவதில் உறுதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது .