கடுப்பில் நிலாவை கீழே தள்ளிய சோழன், பல்லவன் சொன்ன வார்த்தை - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், பரிசில் தன்னுடைய பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு சண்டை வாங்கினார். பாண்டியன், அந்த பணத்தை வைத்து தான் உன்னை வெளியில் எடுத்தோம் என்று சொன்னார். இதை கேட்டு சோழன், பாண்டியனை அடிக்க போனார். பின் இருவருக்கும் இடையே சண்டை அதிகமானது. இதை பார்த்துக் கடுப்பான நிலா, எதற்காக இப்படி சண்டை போடுகிறீர்கள். நீங்கள் ஜெயிலில் இருக்கும் போது அந்த பணத்தை வைத்து தான் எடுக்க முடிந்தது. அவர்கள் என்ன செய்வார்கள். போலீஸ் அடித்ததற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்வீர்களா? நம்மால் என்ன செய்ய முடியும்.
ஒரு மாதத்தில் லைசன்ஸ் கிடைத்துவிடும். நீங்கள் வேலைக்கு போகலாம். தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்யாதீர்கள் என்று இருவருக்குமே புத்திமதி சொல்லி நிலா அனுப்பி வைத்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேரனிடம் நடந்ததை பற்றி பல்லவன் சொன்னார். மீண்டும் சோழன்-பாண்டியன் இருவருக்கும் இடையே சண்டை நடக்க, நிலா கோபத்தில் முறைத்தார். அதற்குப்பின் சோழன்- பாண்டியன் இருவரும் நார்மலாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் பாண்டியன்- சோழன் இருவருமே தங்களுக்கு தெரிந்தவரின் மூலம் ஸ்கூட்டியை வாங்கினார்கள். அந்த ஸ்கூட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து நிலாவிற்கு சோழன் சர்ஃபேஸ் கொடுத்தார். ஸ்கூட்டியை பார்த்தவுடன் நிலவும் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், தனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியாத விஷயத்தை நிலா சொன்னார். இதை கேட்டுச் சோழன் பயங்கரமாக நிலாவை கிண்டல் செய்து பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட நிலா, பல்லவனை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டி கத்துக்கொள்ள சொன்னார்.
நேற்று எபிசோட்:
பின் பல்லவன், தனக்கு தெரிந்தவாறு ஸ்கூட்டி ஓட்ட கற்று தந்தார். இன்னொரு பக்கம் நிலாவிற்காக சோழன் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த சோழன் அப்பா, சீக்கிரமாகவே உன்னை அவள் அண்ணன் கூப்பிட போறாள். நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழும் வழியை பாரு என்றெல்லாம் அறிவுரை செய்தார். இதனால் கோபப்பட்ட சோழன் தன் தந்தையை திட்டிவிட்டு நிலா ஸ்கூட்டி ஓட்ட ப்ராக்டிஸ் செய்யும் இடத்திற்கு சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலாவிற்கு சோழன் ஸ்கூட்டி ஓட்ட சொல்லிக் கொடுக்கிறார். அப்போது தன் அப்பா சொன்ன வார்த்தைகள் எல்லாம் நினைத்து பார்த்து கோபத்தில் சோழன் வண்டியை வேகமாக முறுக்கி விடுகிறார். இதனால் நிலா தடுமாறி கீழே விழுகிறார். உடனே பல்லவன், நானே வண்டி ஓட்டக் கற்றுத் தருகிறேன் என்கிறார். பின் மூவருமே வீட்டிற்கு வருகிறார்கள். அதற்குப்பின் பல்லவன் சொல்லித் தந்த மாதிரி நிலா வண்டியை ஓட்டுகிறார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சந்தா வீட்டிற்கு வருகிறார். சந்தாவை பார்த்தவுடன் வீட்டில் வீட்டில் உள்ள எல்லோருமே நன்றாக பேசுகிறார்கள். அப்போது சந்தா, தமிழ் கற்றுத் தருமாறு பல்லவனிடம் கேட்கிறார். பல்லவன் தன்னுடைய அப்பாவை வெறுப்பேத்த தப்பு தப்பாக தமிழ் வார்த்தைகளை சொல்லித் தருகிறார். அதையெல்லாம் நடேசனிடம் போய் சந்தா பேசுகிறார். கோபத்தில் நடேசன் சந்தாவை திட்டுகிறார். பின் பாண்டியன், சேரனிடம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது