ராகவை அடித்து வெளியே தள்ளும் சோழன், பாண்டியன் சொன்ன வார்த்தை - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 30/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் தாய்மாமன், நடேசனை அடிப்பதால் அவருடைய சோழன் கோபப்பட்டு அடிக்கப் போனார். இதனால் இருவருக்கும் இடையே கலவரம் நடக்கிறது. பின் ஒரு வழியாக அந்த கலவரத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நிலா, முடிந்த கதையை பற்றி பேச வேண்டாம் என்றார். பின் நடேசன் அமைதியாக இருந்தார். பின் சோழன் குடும்பம் அங்கிருந்து கிளம்ப தயாரானார்கள். அதற்கு பின் இந்த சண்டையில் சோழன் கையில் அடிபட்டு இருப்பதால் நிலா அதை பார்த்து மருந்தெல்லாம் போட்டு விட்டார்.

சேரன் குடும்பத்தில் எல்லோருமே ஒரு வழியாக சென்னை வந்து விட்டார்கள். அப்போது பாண்டியன், சோழன் இருவரும் வானதியை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றிருந்தார்கள். அங்கு வானதியின் அண்ணன் பாண்டியனை அடித்தார். பின் சோழனும் பதிலுக்கு அடித்தார். இருவரும் இடையே கலவரம் வெடித்தது. வானதியை பார்த்து பாண்டியன், எப்படி கர்ப்பம் ஆனாய்? என்ன நடக்கிறது? என்றார். இதை கேட்டு வானதின் அம்மா பயங்கரமாக கோபப்பட்டு சண்டை போட்டார்.

அய்யனார் துணை:

அப்போது வானதி, நான் கர்ப்பமாகவே இல்லை. இவர்கள் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்தார்கள். அதனால் தான் பொய் சொன்னேன் என்று உண்மையை சொல்லிவிட்டார். இதைக் கேட்டு வானதியின் அப்பா, அம்மா, அண்ணன் மூவருமே கோபப்பட்டார்கள். பாண்டியனுக்கு அப்போது தான் உயிர் வந்தது. பின் பாண்டியன், அவர்களுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு வந்தார். பின் பாண்டியன், சோழன் இருவரும் வானதி வீட்டில் நடந்ததை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதியின் நிலைமையை நினைத்து சேரன்-நிலா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த சோழன், வானதி கர்ப்பமாகவே இல்லை. அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்தார்கள். அதனால் தான் அவர் பொய் சொன்னார் என்று நடந்ததை எல்லாம் சொல்கிறார். பாண்டியன், என்னை ரொம்பவே பயமுறுத்தி விட்டாள் என்றெல்லாம் நடந்ததை சொல்லிக் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் நிலைமை நினைத்து சிரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனை காதலிக்க கூடாது என்று அவருடைய பெற்றோர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இருந்தாலுமே வானதி தன்னுடைய முடிவில் மாறாமல் இருக்கிறார். அதற்குப்பின் பாண்டியனுக்கு போன் செய்த வானதி, சீக்கிரம் என்னை திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், சேரன் அண்ணா திருமணமாகாமல் நான் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். மறுநாள் காலையில் நிலா வேலைக்கு கிளம்ப தயாராக இருக்கிறார். அப்போது வந்த ராகவ், உங்கள் உடம்பு நன்றாக இருக்கிறதா? ஏன் வேலைக்கு வரவில்லை? என்று ரொம்ப அக்கறையாக பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் ராகவை அடித்து கீழே தள்ளி சண்டை போடுகிறார். ஆனால், இதெல்லாம் சோழனுடைய கனவு. பின் தான் நிலாவின் புருஷன் என்று ராகவிடம் சொல்ல நினைக்கிறார் சோழன்.

behindtalkies AMP · Quick view
View full