வேதனையில் சேரன், பாண்டியனை வெளுத்து வாங்கும் சோழன், நிலா முடிவு என்ன? அய்யனார் துணை

By subhashini · 20/4/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், அந்த காதல் ஜோடிகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைக்க ஒத்துக்கொண்டார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோவிலில் நடக்கிறது. அந்த சமயம் பார்த்து அந்த கோயிலுக்கு பெண்ணுடைய சித்தப்பா வந்து விட்டார். அவர் போலீஸ் அதிகாரி. அவரை பார்த்தவுடன் மாப்பிள்ளையும் அவருடைய நண்பர்களும் தலை தெறிக்க ஓடிவிட்டார்கள். சோழனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சோழனுமே அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். அவருடன் அந்த பெண்ணும் வந்துவிட்டார்.

பின்சோழன் காரை விடாமல் போலீஸ் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஒரு கட்டத்தில் சோழனையும் அந்த பெண்ணையும் போலீஸ் பிடித்து விட்டார்கள். பெண் வீட்டார், போலீசும் சோழனை அடித்தார்கள். ஆனால், அந்த பெண் வாய் திறந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சோழன் எவ்வளவு சொல்லியுமே போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், சோழன் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னார்.

அய்யனார் துணை

சோழன், தான் தவறு செய்யவில்லை என்று சொல்லியும் போலீஸ் கேட்கவில்லை. அடி வெளுத்து வாங்கினார்கள். ஆனால், அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். ஒரு கட்டத்தில் சோழன் குடும்பத்தில் உள்ள எல்லோரையுமே அழைத்து வந்து விட்டார்கள். சேரன், என் தம்பி மீது எந்த தவறும் இல்லை என்று எடுத்து சொல்லி புரிய வைத்தார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. பின் சேரன், பாண்டியன் இருவரும் சோழனை தான் திட்டினார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் நிலா, சோழனை தனியாக அழைத்து சென்று விசாரித்தார். சோழன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு பிறகு அந்த பெண்ணிடமே நிலா, உண்மையை சொல்லு. நீ யாரை காதலித்தாய். எதற்காக இப்படி அமைதியாக இருக்கிறாய் என்றார். அதற்குப்பின் சோழனின் ஓனருக்கு போன் நிலா உண்மையை நிரூபிக்கிறார். கடைசியில் அந்த பெண், நடந்த எல்லா உண்மையும் சொன்னார். இதனால் போலீஸ்மே சோழன் மீது தவறு இல்லை என்று புரிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பல்லவன், நடேசன் இருவருமே சோழனுக்கு என்ன நடந்திருக்கும் என்று கவலையில் இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து சோழன்- நிலா எல்லோருமே வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். சேரன், பாண்டியன் பேச வரும்போது கோபத்தில் சோழன், என்னை அவர்கள் அடித்தது கூட வலிக்கவில்லை. ஆனால், நீங்கள் என்னை விட்டுக் கொடுத்து என் மீது தான் தவறு என்று சொன்னீர்களே அது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று ரொம்ப எமோஷனலாக பேசுகிறார். அதோடு தன்னுடைய சகோதரர்களையும் வெளுத்து வாங்கினார். நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் சேரன், பல்லவனிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறார்

behindtalkies AMP · Quick view
View full