உயிலை மீட்க போராடும் நிலா, ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே குதித்த சோழன் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் குடும்பத்தினர் என்ன செய்வது, எங்கு போவது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, எங்கு போய் தங்குவது? என்று யோசிக்காமல் அந்த வீட்டை நம்முடையது எப்படி ஆக்குவது என்று யோசியுங்கள். அந்த வீட்டிற்க்கான பத்திரம் இருக்கிறதா? யாருடைய பெயரில் இருக்கிறது என்றெல்லாம் கேட்டார். சோழன், எல்லாமே அந்த ஆளுக்கு தான் தெரியும். அவரிடம் கேளுங்கள் என்றார். அதற்குப்பின் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
வானதி- பாண்டியன் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சோழனுக்கு கடுப்பாகி திட்டி விட்டார்.
அதற்குப்பின் நிலா, இந்த வீடு யார் பெயரில் இருக்கிறது? அதற்கான பத்திரம் யாரிடம் இருக்கு தெரியுமா? என்றெல்லாம் கேட்டார். நடேசன், எனக்கு தெரியாது என்றார். கோபத்தில் நிலா, நடேசனை திட்டி விட்டு நல்ல தகப்பனாக இந்த வீட்டை உங்கள் மகன்களுக்கு கொடுக்கா ஏற்பாடு செய்யுங்கள் என்றார். அதற்கு பின் வானதி, பாண்டியனை பார்க்க வந்து விட்டார். அதைப் பார்த்து சோழனுக்கு கடுப்பாகிறது. நிலா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
அய்யனார் துணை:
நடேசன் உயிலை எடுப்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அங்கு வீடு பூட்டு போட்டிருப்பதால் ஒரு கல் எடுத்து உடைக்கிறார். அந்த சமயம் வந்த சேரன், இதெல்லாம் தப்பு வேண்டாம் என்று சொன்னார். ஆனால், நடேசன் கேட்கவில்லை. பின் அந்த இடத்திற்கு வந்த நடேசன் தங்கை பிரச்சினை செய்தார். பின் சேரன், தன் அப்பாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் சோழன்- நிலா இருவரும் உயில் யாரிடம் இருக்கிறது? எப்படியாவது எடுக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது பாண்டியன், பல்லவன் இருவரும் நாங்கள் திருடர்கள் போல பெரியப்பாவிடம் பேசி அந்த உயில் இருக்கும் இடத்தை பற்றி விசாரிக்கிறோம் என்றார்கள். நிலா, இந்த ஐடியா சரி என்று இருவரையும் அனுப்பி வைத்தார். பின் பல்லவன்- பாண்டியன் இருவருமே திருடர்கள் போல மிரட்டி உயில் எங்கே இருக்கிறது? என்று கேட்டார்கள். அதற்கு பெரியப்பா, உயில் என்னிடம் இல்லை. நடேசன் இடம் தான் இருந்தது. ஆனால், அவன் தொலைத்து விட்டான். அவனிடம் தான் விசாரிக்கணும் என்றார். பின் அந்த இடத்திற்கு சோழன்- நிலா இருவரும் வந்து பெரியப்பாவை காப்பாற்றுவது போல அந்த திருடர்களை அடித்து அனுப்பி விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா, சோழன் இருவரும் பத்திரத்தை எடுப்பதற்காக வீட்டிற்குள் போகணும் என்று திட்டம் போடுகிறார்கள். பின் கேட்டின் மீது ஏறி குதித்து நிலா-சோழன் உள்ளே சென்று விடுகிறார்கள். அதற்குப்பின் ஓட்டை பிரித்துக் கொண்டு சோழன் வீட்டுக்குள் இறங்கினார். நிலா வீட்டின் மீது பயத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். வீட்டிற்குள் சென்ற சோழன் எல்லா இடத்திலும் உயிலை தேடுகிறார். ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது