நிலாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் சோழன், பல்லவன் செய்த வேலை - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் வீட்டிற்கு வராததால் நிலா போன் செய்து பேசினார். சோழனுமே வீட்டிற்கு கிளம்பினார். அந்த சமயம் பார்த்து ஒரு பைக் ஓடிவந்த நபர் சோழன் கார் மீது மோதியது. உடனே அந்த நபர் சோழனிடம் சண்டை போட்டு போலீசில் புகார் கொடுத்து விட்டார். சோழன் மீது தான் தவறு என்பது போல் போலீஸ் விசாரித்தார்கள். பின் சோழன் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்த நிலா, சேரன், பாண்டியன் மூவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். சேரன், போலீசிடம் சோழனை விட சொல்லி கெஞ்சுகிறார். ஆனால், போலீசும் அந்த புகார் கொடுத்தவரும் மனமிறங்கவே இல்லை.
அதற்குப்பின் சேரன் தங்களுக்கு தெரிந்த நபரின் மூலம் போலீஸ் இடம் பேச வைத்தார். அவர்களுமே பணம் கொடுத்து பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்றார். பின் சேரனும் தங்களிடம் இருந்த பணத்தை வைத்து சோழனை வெளியில் எடுத்தார்கள். அப்போது கோபத்தில் போலீஸ், சோழனை அடித்து விட்டு லைசன்ஸ் பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் சோழன் கோபப்பட்டு அங்கிருந்து வந்து விட்டார். வீட்டில் பாண்டியன்-சோழன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சோழன், பரிசில் தன்னுடைய பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு சண்டை வாங்கினார். பாண்டியன், அந்த பணத்தை வைத்து தான் உன்னை வெளியில் எடுத்தோம் என்று சொன்னார். இதை கேட்டு சோழன், பாண்டியனை அடிக்க போனார். பின் இருவருக்கும் இடையே சண்டை அதிகமானது. இதை பார்த்துக் கடுப்பான நிலா, எதற்காக இப்படி சண்டை போடுகிறீர்கள். நீங்கள் ஜெயிலில் இருக்கும் போது அந்த பணத்தை வைத்து தான் எடுக்க முடிந்தது. அவர்கள் என்ன செய்வார்கள். போலீஸ் அடித்ததற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்வீர்களா? நம்மால் என்ன செய்ய முடியும்.
நேற்று எபிசோட்:
ஒரு மாதத்தில் லைசன்ஸ் கிடைத்துவிடும். நீங்கள் வேலைக்கு போகலாம். தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்யாதீர்கள் என்று இருவருக்குமே புத்திமதி சொல்லி நிலா அனுப்பி வைத்தார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேரனிடம் நடந்ததை பற்றி பல்லவன் சொன்னார். மீண்டும் சோழன்-பாண்டியன் இருவருக்கும் இடையே சண்டை நடக்க, நிலா கோபத்தில் முறைத்தார். அதற்குப்பின் சோழன்- பாண்டியன் இருவரும் நார்மலாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன்- சோழன் இருவருமே தங்களுக்கு தெரிந்தவரின் மூலம் ஸ்கூட்டியை வாங்குகிறார்கள். அந்த ஸ்கூட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து நிலாவிற்கு சோழன் சர்ஃபேஸ் கொடுக்கிறார். ஸ்கூட்டியை பார்த்தவுடன் நிலவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். ஆனால், தனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியாத விஷயத்தை நிலா சொல்கிறார். இதை கேட்டுச் சோழன் பயங்கரமாக நிலாவை கிண்டல் செய்து பேசுகிறார். இதனால் கோபப்பட்ட நிலா, பல்லவனை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டி கத்துக்கொள்ள செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் பல்லவன், தனக்கு தெரிந்தவாறு ஸ்கூட்டி ஓட்ட கற்று தருகிறார். இன்னொரு பக்கம் நிலாவிற்காக சோழன் வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சோழன் அப்பா, சீக்கிரமாகவே உன்னை அவள் அண்ணன் கூப்பிட போறாள். நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழும் வழியை பாரு என்றெல்லாம் அறிவுரை செய்கிறார். இதனால் கோபப்பட்ட சோழன் தன் தந்தையை திட்டிவிட்டு நிலா ஸ்கூட்டி ஓட்ட ப்ராக்டிஸ் செய்யும் இடத்திற்கு சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது