சோழன் கொடுத்த சர்ப்ரைஸ், கடுப்பான நிலாவின் பெற்றோர்கள் - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 23/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவின் அப்பா, அம்மா அய்யனார் வீட்டிற்கு வருவதால் வீட்டை சேரனும் அவருடைய சகோதரர்களும் சுத்தம் செய்தார்கள். அதற்கு பின் நிலாவின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். தன்னுடைய அப்பா, அம்மாவை பார்த்து நிலா எமோஷனலாக அழுதார். பின் நிலாவின் அப்பா, அம்மாவை சேரனும் அவருடைய சகோதரர்களும் அன்பாக கவனித்தார்கள். அப்போது நிலாவின் அப்பா, உங்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனதை கேள்விப்பட்டேன். இனிமேல் நீ இங்க இருக்க தேவை இல்லை. எங்களுடன் வீட்டிற்கு வந்துவிடு என்றார். சோழன் ஷாக் ஆனார்.

சேரன், பாண்டியன் யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் நிலாவின் அம்மா, தனியாக உன்னிடம் பேச வேண்டும். வெளியே வா போகலாம் என்றார். நிலா தயங்கி நிற்கிறார். நிலா அப்பா, பயப்படாதே உன்னை இங்கேயே கொண்டு வந்து விடுகிறேன் என்று அழைத்து சென்றார். சோழன், நிலா தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாள் என்று சேரனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பின் கோயிலுக்கு நிலாவை அழைத்து சென்றார்கள். அங்கு நிலாவின் அப்பா ரொம்ப அக்கறையாக பேசி இருந்தார். தங்களுடைய வீட்டிற்க்கே வந்து விட சொல்லி கேட்டார். நிலா, நான் வரவில்லை இங்கேயே இருக்கிறேன் என்றார்.

அய்யனார் துணை:

நிலாவின் அப்பா, உனக்கு வேலை தான் முக்கியம் என்றால் நாங்களும் சென்னையில் உன் உடன் தங்குகிறோம். அவர்கள் வீட்டில் வேணாம் என்றார். இதனால் நிலா ஒத்து கொண்டார். பின் அய்யனார் வீட்டிற்கு வந்த நிலாவின் அப்பா, நிலாவுடன் சென்னையிலேயே தங்கும் விசயத்தை சொன்னார்கள். சோழன், அதெல்லாம் நிலாவை இங்கிருந்து அனுப்ப முடியாது என்றார். நிலா எதுவும் பேசாமல் தன்னுடைய துணிகளை எல்லாம் பேக் செய்து கொண்டு வெளியே வந்தார். சோழன் எமோஷனலாக அழுதார். நிலாவின் அப்பா தாங்கள் தங்கி இருக்கும் வீட்டு அட்ரஸை சிலரிடம் கொடுத்து விட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா வீட்டை விட்டு போனதால் சோழன் ரொம்பவே எமோஷனலாக உடைந்து போயிருக்கிறார். நடேசன் வேண்டும் என்று சோழனை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சோழன், நடேசனை அடிக்க வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே தடுக்க, கலவரமே வெடிக்கிறது. அந்த சமயம் நிலாவின் அப்பா மீண்டும் சோழன் வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர், இதனால் தான் என் மகளை இங்கு விடக்கூடாது என்று சொல்கிறேன். எப்படியாவது நான் நிலாவை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்று விடுவேன் என்றெல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் கடையில் பாண்டியன், வானதியிடம் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி வருத்தப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வானதி, தன்னுடைய தோழிகளிடம் வெளியே செல்வதால் பாண்டியனை வரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அதற்கு பின் நிலாவிற்காக அவருடைய அம்மா பார்த்து பார்த்து சமைத்து வைக்கிறார். நிலா தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்தாலும் சோழன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சோழன், நிலாவிற்காக பரோட்டா வாங்கி வந்து தருகிறார். நிலா, தன் அம்மா சமைத்த சமையலை சாப்பிடாமல் சோழனுடன் சேர்ந்து அவர் வாங்கி வந்த பரோட்டாவை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து நிலாவின் அம்மாவிற்கு பயங்கர கடுப்பாகிறது

Tamil Behind Talkies AMP · Quick view
View full