தன் காதலை சொல்ல துடிக்கும் சோழன், நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை

By subhashini · 11/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி அப்பா, அம்மா இருவருமே வீட்டிற்கு வந்து பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இது எல்லாம் பார்த்த நிலா, கோபப்பட்டு சோழனிடம் தாலியை கேட்டார். சந்தோஷத்தில் சோழன் தாலியை கொடுக்க, நிலா, கழுத்தில் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். பின் நிலா, நான் இந்த வீட்டில் தான் வாழ்கிறேன். நீங்கள் நினைக்கும் மாதிரி இங்கு எந்த பிரச்சனையுமே இல்லை என்றெல்லாம் சோழன் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார்.

நிலா, இந்த வீட்டில் உள்ளவர்கள் போல வேறு எங்கேயுமே இருக்க முடியாது. அவ்வளவு தங்கமாக பெண்களை பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் மகளை திருமணம் செய்து கொடுங்கள் இல்லை கொடுக்காமலும் போங்க. அது உங்கள் விருப்பம். ஆனால், இந்த குடும்பத்தை பற்றியும் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். நிலா பேசுவதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

அய்யனார் துணை:

சண்டை முடிந்த பிறகு நிலா வழக்கம் போல தாலியை கழட்டி சோழன் கையில் கொடுத்தார். இன்னொரு பக்கம் வானதி, அவருடைய அண்ணனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த வானதியின் பெற்றோர்கள், இனி நீ பாண்டியனுடன் பேசக்கூடாது என்று திட்டினார்கள். ஆனால், வானதி கேட்கவே இல்லை. பின் வானதி, பாண்டியனை சந்தித்து பேசி இருந்தார். அப்போது இருவரும் சண்டை போட்டு கொண்டார்கள். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பீச்க்கு போனார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பீச்சில் நிலா, சோழன் இருவருமே சந்தோஷமாக விளையாடினார்கள். அந்த சமயம் பார்த்து நடேசன் பீச்சில் குடிப்பதால் போலீஸ் அவரை திட்டி வார்னிங் கொடுக்கிறார்கள். இதனால் சோழன் குடும்பத்தினர் நடேசனை திட்டினார்கள். மறுநாள் காலையில் நிலா ஸ்கூட்டி ஓட்டுவதற்கு சோழனை அழைத்துக்கொண்டு போனார். அதற்கு பின் பல்லவன், நிலா இருவரும் வேலைக்கு கிளம்பு போது வானதியின் அண்ணன் வழி மறைத்து நிலாவை பற்றி ரொம்ப மோசமாக பேசி விட்டார். இதனால் கோபப்பட்டு பல்லவன் அவர்களை அடிக்க போக, நிலா தடுத்து விட்டார்.

https://youtu.be/KwVEJtNvvKs?si=9pan0TPZK2NagLSX

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வக்கீல், விவாகரத்துக்கு அப்ளை செய்யணும் நிலாவை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்கிறார். அதற்கு சோழன், இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போட முடியுமா? என்று கேட்கிறார். அதற்கு வக்கீல், நீங்கள் உங்கள் மனைவியிடம் தான் பேச வேண்டும் என்று சொல்கிறார். அதற்குப்பின் சோழன், நான் நிலாவிடம் என் மனதில் இருக்கும் காதலை சொல்ல போகிறேன் என்றெல்லாம் சொல்கிறார். அதைக் கேட்டு சேரனுமே சரி என்கிறார். அதற்கு பின் நிலாவை அழைத்துக் கொண்டு சோழன் பீச்சுக்குப் போகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full