சேரனை நினைத்து உடைந்து போன சோழன், போலீசில் புகார் கொடுத்த நிலா - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரனுடைய ஜாதகத்தை பார்த்த ஜோதிடர், இந்த ஜாதகத்துக்காரருக்கு பெண் தோஷம் இருக்கிறது. இவருக்கு திருமணமே ஆகாது. இவர் இருக்கும் வீட்டில் யாருக்குமே திருமணம் ஆகாது. அப்படியே திருமணமாகி வந்தாலும் அந்த பெண் நிலைத்து நிற்க மாட்டார். இவரால் இந்த குடும்பத்தில் எந்த ஒரு நல்ல காரியமே நடக்காது என்றெல்லாம் சொன்னார். இதை கேட்டு சேரன் உடைந்து போனார். சோழனால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். பெண் வீட்டார் உடனே அங்கிருந்து சென்று விட்டார்கள்.
வேதனையில் சேரன் எதுவுமே பேச முடியவில்லை அமைதியாக இருந்தார். அப்போது சோழன், நான்தான் ஜாதகம் எழுதிட்டு வந்தேன். அது பொய்யான ஜாதகம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று தன்னுடைய அண்ணனை சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால், சோழன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், சேரன் கேட்கவே இல்லை இடிந்து போய் உட்கார்ந்தார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சேரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார்கள். ஆனால், சேரன் தூங்கவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அதற்குப்பின் சேரன், தன் தம்பிகள் தூங்கியவுடன் எமோஷனலாக ரொம்ப கதறி அழுதார். மறுநாள் காலையில் வீட்டில் சேரன் இல்லை. வீடு முழுக்க சேரனை எல்லோருமே தேடினார்கள். அப்போது பல்லவன், சேரன் எழுதி வைத்த கடிதத்தை கொடுத்தார்.
நேற்று எபிசோட்:
அதில் சேரன், என்னால் யாருடைய வாழ்க்கையும் கெட வேண்டாம். நான் வீட்டை விட்டுப் போகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். என்னை பற்றி யாரும் கவலை பட வேண்டாம் என்றார். இதைக் கேட்டு நிலா, சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே எமோஷனலாக கதறி அழுதார்கள். பின் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் சென்று தேடினார்கள். ஆனால், எங்குமே சேரன் கிடைக்கவில்லை. சேரன் வேலை செய்யும் இடத்தில் எல்லாம் சென்று விசாரித்தார்கள். அங்கேயுமே அவர் இல்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் எங்கு தேடியும் சேரன் கிடைக்கவில்லை என்று அவருடைய தம்பிகள் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். நடேசன் எல்லா இடத்திலும் தேடிப் பார்க்கிறார். ஆனால், சேரன் இல்லை. சோழன் ரொம்பவே வருத்தப்படுகிறார். அதற்குப்பின் சோழன்- நிலா இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேரன் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அதற்குப் பின் சோழன் தன் அண்ணனை நினைத்து ரொம்பவே எமோஷனலாக கதறி அழுகிறார். நிலா, அவருக்கு ஆறுதல் சொல்லி பார்க்கிறா.ர் இருந்தாலுமே சோழன் கேட்கவில்லை.