அவசர அவசரமாக நடக்கும் சேரன் திருமணம், தடையாக இருக்கும் தம்பிகள் - அய்யனார் துணை

By subhashini · 6/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் அந்த பெண் தன்னை காதலிக்கவில்லை தன் அண்ணன் பாண்டியனை தான் காதலிக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்ட பல்லவன் ரொம்பவே கவலைப்பட்டார். இதை அறிந்த சோழன் சந்தோஷத்தில் பாண்டியனிடம் நடந்ததை சொன்னார். இதை எல்லாம் கேட்ட வானதி, வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கிறார். பின் அந்த பெண்ணிடம் சண்டை போடவானதி கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சேரனுக்கு தரகர் ஒரு பெண்ணை பார்த்திருக்கிறார். அவர் கல்யாணம் ஆகி விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்.

அந்தப் பெண் தன்னுடைய முன்னாள் கணவரை வெறுப்பேற்றுவதற்காகவே திருமணம் செய்ய வேண்டும் என்றார். இதில் சேரனுக்கு விருப்பமில்லை. இருந்தாலும் தன்னுடைய தம்பிகளுக்காக ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் பஸ் ஸ்டாண்டில் அந்த பெண்ணை பார்த்து வானதி பயங்கரமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அந்த பெண்ணிற்கு ஓன்றுமே முடியவில்லை. பின் வானதி, நான் தான் பாண்டியனை திருமணம் செய்ய போகிறேன். ஒழுங்கு மரியாதையை இரு என்றெல்லாம் மிரட்டினார். பின் அந்த பெண், நான் பாண்டியனை யார் என்று தெரியாது. நான் சோழனை தான் காதலிக்கிறேன் என்றார்.

அய்யனார் துணை:

இன்றைய எபிசோட்டில் அந்தப் பெண் பாண்டியனை காதலிக்கவில்லை என்று தெரிந்தவுடன் வானதி சந்தோஷப்படுகிறார். பின் சோழன் உண்மை தெரியாமல் பாண்டியனை அந்த பெண் காதலிக்கிறார் என்று நிலாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது பல்லவன், அந்த பெண் பாண்டியனை காதலிக்கவில்லை. சோழன் அண்ணனை தான் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் நிலாவிற்கு ஷாக் ஆகிறது. சோழன் இதுதான் சந்தர்ப்பம் என்று நிலாவை வெறுப்பேற்ற அந்த பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார். பின் சோழன், அந்த பெண்ணை சந்தித்து பேசுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் சோழன், அந்த பெண்ணினுடைய பெயரை கண்டுபிடித்துவிட்டேன். காயத்ரி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட நிலா, கடுப்பாகி அந்த இடத்தை விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பெண் வீட்டில் திருமணத்தை பற்றி பேசுவதாக தரகர் சொல்வதால் சேரனுக்கு என்ன செய்வது புரியவில்லை. குழப்பத்திலேயே இருக்கிறார். வீட்டில் உள்ளவர்களிடமும் சரியாக பேசவும் இல்லை. அதற்குப்பின் சோழன், காயத்ரியை சந்தித்து பேச டிப் டாப்பாக ரெடியாகி கிளம்புகிறார். இதையெல்லாம் பார்த்த நிலாவிற்கு கோபம் அதிகமாகி சோழனின் தலையைப் பிடித்து சுவற்றில் அடிக்கிறார்.

https://www.youtube.com/watch?v=QOxp5m2zBcU

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சேரன் வீட்டிற்கு பெண் வீட்டார் வருகிறார்கள். அப்போது கல்யாண பெண், எனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இது எனக்கு இரண்டாவது திருமணம் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு சேரன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். சேரன், எல்லாமே பேசி ஆகிவிட்டது. எனக்கு சம்மதம் என்று சொல்கிறார். பின் நிச்சயதார்த்தம், திருமணத்தைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள். அதற்கு பிறகு சோழன், எதற்கு இந்த அவசர கல்யாணம்? எதற்காக இந்த முடிவு எடுத்தீர்கள்? என்று கேட்கிறார். நடேசன், இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு சேரன், எனக்கு இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று பாண்டியனை பார்த்து சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full