காசுக்காக அடித்து கொள்ளும் சோழன்-பாண்டியன், கொந்தளித்த நிலா - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 13/11/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஜெயந்தியை ஒரு கடைக்கு வர சொன்னார் சோழன். பின் அந்த இடத்திற்கு சோழன் - நிலா இருவருமே சென்றார்கள். அப்போது நிலா, திருமணம் சீக்கிரமாக நடப்பதை பற்றி விசாரித்தார். ஜெயந்தி, தன்னுடைய முன்னாள் கணவரை வெறுப்பேற்றுவதற்காக தான் திருமணம் செய்கிறேன் என்று எல்லா விஷயத்தையும் சொன்னார். இதைக் கேட்டு சோழன்- நிலாவிற்கு ஷாக்காக இருந்தது. இன்னொரு பக்கம் வானதி- பாண்டியன் இருவருமே சண்டை போட்டவதை நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

வானதி போன் செய்து சண்டை வாங்குகிறார். பாண்டியன், நீ ரொம்ப சுயநலவாதி. உனக்கு மட்டும் கல்யாணம் நடந்தால் போதுமா? என் அண்ணனின் வாழ்க்கை பார்க்க வேண்டாமா? என்றெல்லாம் கேட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டையில் முடிந்தது. இதையெல்லாம் பார்த்து வானதி அண்ணன் வசந்த் சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சேரன் திருமணம் நடக்க இருப்பதால் வீட்டிற்கு தேவையான பொருள்களை எல்லாம் நிலா-சோழன் வாங்கினார்கள். அப்போது ஒரு பெண், சோழனிடம் பேசுகிறாள்.

அய்யனார் துணை:

இதை பார்த்து நிலா கோபப்பட்டு சோழனை அங்கிருந்து அழைத்துச் சென்றார். அதற்குப்பின் வீட்டிற்கு நிலா-சோழன் இருவரும் வந்து விட்டார்கள். பின் தாங்கள் வாங்கிய பொருள்களை எல்லாம் சுத்தம் செய்து அடுக்கி வைத்தார்கள். இதை பார்த்து சேரனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்குப்பின் மீண்டும் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து சண்டை வாங்கினார். கோபத்தில் பாண்டியன், இனிமேல் எனக்கு போனை செய்து விடாதே என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டிற்கு தேவையான பொருள்களை எல்லாம் நிலா தன்னுடைய காசில் வாங்கியதால் பாண்டியன் கோபப்பட்டு சோழனிடம் சண்டை போடுகிறார். சோழன், நிலா வீட்டுக்காக செய்ததில் எனக்கு சந்தோசம் தான் என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், கேவலமாக இல்லையா? உன்னுடைய காசு ஒரு ரூபாய் கூட செலவு பண்ண மாட்டியா? என்று இருவரும் சட்டையை பிடித்துக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள். அப்போது வந்த நிலா, இருவர் மீதும் தண்ணீர் ஊற்றிவிட்டு அமைதியாகவே இருக்க முடியாதா? இப்படியே இருந்தால் இந்த வீட்டிற்கு எப்படி இன்னொரு பெண் வந்து தங்குவார் என்றெல்லாம் கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

இதனால் சோழன்- பாண்டியன் இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். அதற்குப்பின் நிச்சயதார்த்தத்திற்கு தேவையான ஏற்பாடுகளை எல்லாம் நிலா செய்து கொண்டிருக்கிறார். அப்போது நிச்சயதார்த்தத்திற்கு சேரன் தன்னுடைய பெரியப்பா, அத்தையும் அழைக்க செல்கிறார். அவர்கள், சேரனை திட்டி அனுப்புகிறார்கள். ஆனால் கார்த்திகா, கண்டிப்பாக நான் வருகிறேன் என்று சொல்கிறார். அதற்கு பின் தன்னுடைய அம்மா, மாமாவிற்கு கார்த்திகா அறிவுரை சொல்லி நிச்சயதார்த்தத்திற்கு கூப்பிடுகிறார்.
இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் இருவருமே ஜெயந்தி குடும்பத்தை பற்றி விசாரிக்க அவருடைய ஊருக்கு சென்று இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full