நிலாவை மோசமாக பேசிய வானதி அண்ணனை வெளுத்து வாங்கிய சோழன் பிரதர்ஸ் - அய்யனார் துணை

By subhashini · 24/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஆதார் கார்டு கிடைத்ததை நினைத்து நிலா சந்தோஷப்பட்டார் ஆனால், நிலா சோழன் என்பதை பார்த்து கோபப்பட்டார். உடனே சோழன், ப்ரூப்காக தான் கொடுத்தேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றெல்லாம் சமாளித்தார். நிலா, முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் பல்லவனிடம் சோழன், நிலா ஆதார் கார்டில் என்னுடைய பெயரை தூக்க ரொம்ப கஷ்டப்படணும். அதற்கு பதில் என்னுடன் வாழ்ந்து விடலாம் என்று தோன்றும். அதற்கு பல்லவன், சோழன் செய்த பிராடு வேலையை சொல்லி திட்டினார்.

அதன் பின் சோழன்-நிலா இருவரும் லைசன்ஸ் அப்பிளை செய்தார்கள். நேற்று எபிசோட்டில் நிலா ஆஃபீஸ்க்கு போனார். அங்கு நிலாவின் பிறந்தநாளுக்காக ராகவ், கேக் வெட்டி கொண்டாடினார். அதோடு எல்லோருக்குமே பிரியாணி வாங்கி தருவதாக சொன்னார். நிலா வேண்டாம் என்று தடுத்துமே ராகவ் கேட்கவில்லை. இதை பார்த்து அங்கு வேலை செய்பவர், இதுவரை யாருக்குமே ராகவ் இப்படி செய்யவில்லை. நிலா ஸ்பெஷல் என்று சொன்னார். ஆனால், நிலா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அய்யனார் துணை:

இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனை மறக்க சொல்லி அவருடைய பெற்றோர்கள் திட்டினார்கள். அதற்கு வானதி, என்னால் முடியாது என்று சண்டை போட்டார். இன்னொரு பக்கம் சோழன், லைசன்ஸ் வாங்குவதற்காக நிலாவை rto ஆபிஸ் போனார்கள். அங்கு நிலாவை வண்டி ஓட்ட சொன்னார்கள். ஆனால், நிலா பயத்தில் தடுமாறி ஓட்டினார். இதனால் நிலா லைசன்ஸை ரிஜெக்ட் செய்தார்கள். இருந்தாலுமே விடாமல் சோழன் கெஞ்சி கேட்டு இன்னொரு வாய்ப்பு வாங்கி தந்தார். இருந்தாலும் நிலா பயத்தில் இருந்தார். உடனே சோழன், நிலாவிற்கு வேகம் வரணும் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், கடுமையாக திட்டியதால் கோபப்பட்டு நிலா சரியாக வண்டி ஓட்டி காண்பித்து விடுகிறார். இதனால் அவருக்கு லைசன்ஸ் கிடைக்கிறது. பின் சோழன், தான் திட்டியதற்கான காரணத்தையும் சொல்கிறார். இதனால் நிலா சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் வானதியின் அண்ணன், நிலாவை பார்த்து 5 எலி, பாஞ்சாலி இங்க பாரு, பாஞ்சாலி தானே நீ என்றெல்லாம் கிண்டல் பண்ணி பேசுகிறார். நிலாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. இன்னும் மோசமாக நிலாவை பேசுகிறார். இதனால் நிலாவிற்கு அவமானமாக இருக்கிறது.

சீரியல் ட்ராக்:

பின் வீட்டிற்கு வந்து நிலா ரொம்பவே அழுகிறார். பின் வானதி அண்ணன் பேசியதை சொல்கிறார். இதனால் கோபப்பட்டு சோழன், நிலாவை அழைத்து செல்கிறார். அப்போது பல்லவன், இதற்கு முன்பு வானதி அண்ணன் பேசியது எல்லாம் சொல்கிறார். கொந்தளித்த பல்லவன், சேரன், சோழன் மூவருமே வானதி அண்ணனிடம் போய் சண்டை போடுகிறார்கள். அந்த சமயம் வந்த பாண்டியனும் வானத்தின் அண்ணனை வெளுத்து வாங்கினார். அதற்குப்பின் வானதி அண்ணன், தான் செய்த தவறை சொல்லாமல் பாண்டியன் குடும்பத்தார் அடித்ததை மட்டும் சொல்கிறார். இதனால் கோபப்பட்ட வானதியின் அம்மா, போலீஸ் ஸ்டேஷனில் சோழன் குடும்பத்தின் மீது புகார் கொடுக்கப் போகிறார். வானதி, உண்மை தெரிந்து கொண்டு செய்யலாம் என்று சொல்லியுமே அவர் அம்மா கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full