சேரனிடம் பிரச்சனை செய்யும் வானதி அண்ணன், கோபத்தில் அடிக்க போன சோழன் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா தாலியை கழட்டித் தந்ததால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த வானதி சோழனிடம் வம்பு இழுத்து இருவருமே சண்டை போட்டுக் கொண்டார்கள். பின் வானதியை அங்கிருந்து பாண்டியன் அழைத்து சென்று விட்டார். அதற்குப்பின் சோழன் தன்னுடைய ஓனரிடம் நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் நிலா, விவாகரத்து கேட்க, சோழன் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
நிலா, வேலை முடித்து வீட்டிற்கு வந்த நிலா, என்னுடைய ஆபீஸில் நம்முடைய வீட்டைப் பற்றி சொன்னேன். அவர்கள் வீட்டை பார்க்க வருகிறார்கள் என்றார். இதைக் கேட்டவுடன் சேரன் சரி என்றார். ஆனால், சோழன் மட்டும் சோகத்தில் இருந்தார். இதை பார்த்த அவருடைய அண்ணன், என்ன நடந்தது? என்று கேட்டார். அப்போது சோழன், நிலா விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி சொன்னார். பின் வீட்டிற்கு நிலாவின் பாஸ் வந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே நிலா அறிமுகம் செய்து வைத்தார். சோழனையும் அண்ணன் என்பது போல சொல்லி இருந்தார். அதனால் சோழனுக்கு பயங்கர கோபம்.
அய்யனார் துணை:
பின் பாஸ், நிலா வீட்டை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டார் . நிலா, வீட்டை எல்லாம் சுத்தி காண்பித்து சொல்லி கொண்டு இருந்தார். இது எல்லாம் பார்த்த சோழனுக்கு பயங்கர கடுப்பாகி தன் அண்ணனிடம் சென்று புலம்பி கொண்டிருந்தார். சோழன், காதலர் தினம் வருவதற்குள் என்னுடைய காதலை எப்படியாவது நிலாவிடம் சொல்லி புரிய வைப்பேன். அவள் வாயாலே என்னை காதலிக்கிறேன் என்று சொல்ல வைப்பேன் என்றெல்லாம் சபதம் போட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் சோழன், இனி நிலா உன்னை அண்ணா என்று கூப்பிட கூடாது.. நீயே அவளிடம் எடுத்து சொல்லி புரிய வை என்று தன்னுடைய சேரன் அண்ணனிடம் சொல்கிறார். அதுக்குப்பின் சேரன், இனிமேல் நீ என்னை அண்ணா என்று அழைக்காதே என்றார். இதைக் கேட்டு வேதனைப்பட்ட நிலா, கதறி அழுகிறார். உடனே சேரன், நீ எனக்கு தங்கை, நான் உனக்கு அண்ணா தான். உன்னுடைய குழந்தைங்களுக்கும் தாய் மாமன் நான்தான். என்னுடைய மடியில் தான் குழந்தைகளுக்கு காது குத்தணும் என்றெல்லாம் பாசமலர் கதையை ஓட்டுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
சீரியல் ட்ராக்:
இதெல்லாம் பார்த்து சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் தன் அண்ணனை அழைத்து திட்டிய சோழன், நான் உனக்கு தம்பி இல்லை என்று எப்படியாவது நிலாவிடம் சொல்லுங்க என்கிறார். அதற்குப்பின் நிலாவிடம் சேரன், இவன் எனக்கு தம்பி கிடையாது. மாமன் பையன். உனக்கும் முறைமாமன் தான் என்று சொல்கிறார். இதெல்லாம் நிலவிற்கு ஒண்ணும் புரியவில்லை. நிலா, உங்களுக்கு அப்பா அம்மா வேறு வேறா? என்று கேட்டவுடன் சேரன் சுதாப்பி விட்டார். பின் சோழன் எதையோ சொல்லி நிலாவை அனுப்பி விட்டார்.
https://www.youtube.com/watch?v=zjrzWip4ikI
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வானதி- பாண்டியன் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை வானதியின் அண்ணன் பார்த்து விடுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன் வீட்டிற்கு சென்று வானத்தின் அண்ணன் பிரச்சனை செய்கிறார். ஆனால், பாண்டியன் வீட்டில் இல்லை. சேரன், அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் சேர்த்து வைத்து விடலாம் என்று சொல்கிறார். உடனே கோபத்தில் வானதியின் அண்ணன், சேரன் குடும்பத்தை ரொம்ப தரக்குறைவாக பேசுகிறார். இதனால் கோபத்தில் சோழன் வானதியின் அண்ணனை அடிக்கிறார்.