குழாய் அடி சண்டை போல் மாய்ந்து கொள்ளும் பாண்டியன்-சோழன், கொந்தளித்த நிலா - அய்யனார் துணை

By subhashini · 20/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மேனேஜர் வேறொரு நபரை திட்டினார். அந்த சமயம் பார்த்து நிலாவிற்கு சோழன் போன் செய்தார். நிலாவை தான் மேனேஜர் திட்டுகிறார் என்று தவறாக புரிந்து கொண்ட சோழன், ஆபிசுக்கு வந்து பிரச்சனை செய்தார். இதனால் மேனேஜர்- சோழன் இடையே வாக்குவாதம் நடந்தது. பின் அந்த இடத்திற்கு வந்த ஓனர் சண்டையை நிறுத்தி சோழனை வெளியே அனுப்பி விட்டார். சோழன் செய்த தவறுக்காக நிலா மன்னிப்பு கேட்டார்.

இன்னொரு பக்கம் வானதி தன்னுடைய வண்டி ரிப்பேர் ஆகிவிட்டது என்று பாண்டியனிடம் காலேஜில் விட சொன்னார். பின் இருவரும் ரொம்ப ரொமான்ஸ் ஆக பேசிக்கொண்டு போனார்கள். பின் நிலா வீட்டிற்கு வந்தார். அப்போது சோழன், ஆபீஸில் உங்களிடம் யாரும் வம்பிழுக்க மாட்டார்கள் என்று பேசி இருந்தார். உடனே கோபத்தில் நிலா, உங்களுக்கு அறிவில்லையா? யாரைக் கேட்டு என்னுடைய ஆபீசுக்கு வந்தீர்கள்? நீங்கள் யார் என்றெல்லாம் என்று நடந்ததை சேரனிடம் சொன்னார். நிலா திட்டியதால் சோழனால் எதுவும் பேச முடியவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சோழன் செய்ததை தான் தவறு என்பது போலவே பேசி இருந்தார்கள்.

அய்யனார் துணை:

நேற்று எபிசோட்டில் சோழன் வீட்டிற்கு வராததால் நிலா போன் செய்து பேசினார். சோழனுமே வீட்டிற்கு கிளம்பினார். அந்த சமயம் பார்த்து ஒரு பைக் ஓடிவந்த நபர் சோழன் கார் மீது மோதியது. உடனே அந்த நபர் சோழனிடம் சண்டை போட்டு போலீசில் புகார் கொடுத்து விட்டார். சோழன் மீது தான் தவறு என்பது போல் போலீஸ் விசாரித்தார்கள். பின் சோழன் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை அறிந்த நிலா, சேரன், பாண்டியன் மூவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். சேரன், போலீசிடம் சோழனை விட சொல்லி கெஞ்சுகிறார். ஆனால், போலீசும் அந்த புகார் கொடுத்தவரும் மனமிறங்கவே இல்லை.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் சேரன் தங்களுக்கு தெரிந்த நபரின் மூலம் போலீஸ் இடம் பேச வைத்தார். அவர்களுமே பணம் கொடுத்து பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்றார். பின் சேரனும் தங்களிடம் இருந்த பணத்தை வைத்து சோழனை வெளியில் எடுத்தார்கள். அப்போது கோபத்தில் போலீஸ், சோழனை அடித்து விட்டு லைசன்ஸ் பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் சோழன் கோபப்பட்டு அங்கிருந்து வந்து விட்டார். வீட்டில் பாண்டியன்-சோழன் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சோழன், பரிசில் தன்னுடைய பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு சண்டை வாங்கினார். பாண்டியன், அந்த பணத்தை வைத்து தான் உன்னை வெளியில் எடுத்தோம் என்று சொல்கிறார். இதை கேட்டு சோழன், பாண்டியனை அடிக்க போகிறார். இருவருக்கும் இடையே சண்டை அதிகமாகி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். இதை பார்த்துக் கடுப்பான நிலா, எதற்காக இப்படி சண்டை போடுகிறீர்கள். நீங்கள் ஜெயிலில் இருக்கும் போது அந்த பணத்தை வைத்து தான் எடுக்க முடிந்தது. அவர்கள் என்ன செய்வார்கள். போலீஸ் அடித்ததற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்வீர்களா? நம்மால் என்ன செய்ய முடியும்.

சீரியல் ட்ராக்:

ஒரு மாதத்தில் லைசன்ஸ் கிடைத்துவிடும். நீங்கள் வேலைக்கு போகலாம். தேவையில்லாமல் வீட்டில் பிரச்சனை செய்யாதீர்கள் என்கிறார். அதற்குப்பின் பாண்டியனிடம் நிலா, கோபத்தில் இருப்பவர்களிடம் எப்படி பேசணும் என்ற அறிவு கூட இல்லையா? என்று திட்டுகிறார். இருவருக்குமே புத்திமதி சொல்லி நிலா அனுப்பி வைக்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேரனிடம் நடந்ததை பற்றி பல்லவன் சொல்கிறார். மீண்டும் பேசிக்கொள்வது போல சோழன்-பாண்டியன் இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. நிலா கோபத்தில் முறைக்கிறார். இதனால் இருவரும் அமைதியாகிவிடுகிறார்கள். அதற்குப்பின் சோழன்- பாண்டியன் இருவரும் நார்மலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், தனக்கு தெரிந்தவரின் கார் விற்பனைக்கு உள்ளதை பற்றி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full