நிலா சொன்ன வார்த்தை, சண்டை போட்டு பிரியும் பாண்டியன், வானதி - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலா இருவருமே சேர்ந்து வக்கீலை சந்தித்து விவாகரத்து பற்றி பேசி இருந்தார்கள். அப்போது வக்கீல், விவாகரத்துக்கான காரணத்தை கேட்டார். அதற்கு நிலா, சேர்ந்து வாழ விருப்பமில்லை. நிலா சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றார். அதற்கு பின் இருவருமே விவாகரத்திற்கு தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது youtube ஒருவர், நிலா-சோழன் இருவரையும் பேட்டி எடுத்தார்கள். அவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட விஷயத்தை பற்றி சொன்னார்கள்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிலாவிடம், வானதியின் அண்ணன் சண்டை போட்ட விஷயத்தை பற்றி சேரன் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் வந்தவுடன் வீட்டில் உள்ள எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அப்போது நடேசன், வானதியின் அண்ணன் வீட்டில் செய்த பிரச்சினையை பற்றி பாண்டியனிடம் சொன்னார். இதைக் கேட்டு பாண்டியன் கோபப்பட்டு வானதியின் வீட்டிற்கு போக பார்த்தார். ஆனால், சேரன் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தார்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் வானதியின் அண்ணன் வீட்டில் சண்டை வாங்கியதால் பாண்டியன் கோபப்பட்டு வானதிக்கு போன் செய்து திட்டிக் கொண்டிருந்தார். வானதி, எனக்கு தெரியாது என்று பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பின் சோழன்- பாண்டியன் இருவருமே வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வானதியின் வீட்டிற்கு சென்று பார்த்தார்கள். அங்கு வானதியின் வாடகை வீடு ரொம்ப சின்னதாக இருப்பதால் சோழன் கிண்டல் கேலி செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த வானதியின் அண்ணன் சண்டை வாங்கினார். பின் இருவருக்கும் இடையே சண்டை நடந்தது.
நேற்று எபிசோட்:
மேலும், வீட்டில் அதைப் பற்றி பெரிதாக இருவருமே சொல்லிக் கொள்ளவில்லை. அந்த சமயம் பார்த்து வானதி அப்பா, அம்மா இருவருமே வீட்டிற்கு வந்து பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இது எல்லாம் பார்த்த நிலா, கோபப்பட்டு சோழனிடம் தாலியை கேட்டார். சந்தோஷத்தில் சோழன் தாலியை கொடுக்க, நிலா, கழுத்தில் போட்டுக் கொண்டு வெளியே வந்தார். பின் நிலா, நான் இந்த வீட்டில் தான் வாழ்கிறேன். நீங்கள் நினைக்கும் மாதிரி இங்கு எந்த பிரச்சனையுமே இல்லை என்றெல்லாம் சோழன் குடும்பத்திற்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். இதையெல்லாம் பார்த்து சோழன் சந்தோஷப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, இந்த வீட்டில் உள்ளவர்கள் போல வேறு எங்கேயுமே இருக்க முடியாது. அவ்வளவு தங்கமாக பெண்களை பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உங்கள் மகளை திருமணம் செய்து கொடுங்கள் இல்லை கொடுக்காமலும் போங்க. அது உங்கள் விருப்பம். ஆனால், இந்த குடும்பத்தை பற்றியும் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். நிலா பேசுவதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். குறிப்பாக, சோழன் தன்னை கணவன் என்று நிலா சொன்னதால் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
சண்டை முடிந்த பிறகு நிலா வழக்கம் போல தாலியை கழட்டி சோழன் கையில் கொடுக்கிறார். ஆனால், இந்த முறை சோழன் கவலைப்படாமல் நிலா தன்னை புருஷன் என்று சொன்னதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் வானதி, அவருடைய அண்ணனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் வந்த வானதியின் பெற்றோர்கள், இனி நீ பாண்டியனுடன் பேசக்கூடாது என்று திட்டுகிறார்கள். ஆனால், வானதி கேட்கவே இல்லை. பின் வானதி, பாண்டியனை சந்தித்து பேசுகிறார். அப்போது இருவரும் சண்டை போட்டு கொண்டார்கள். இன்னொரு பக்கம் நிலா வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பீச்க்கு போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.