சேரனை அசிங்கப்படுத்தும் வானதி அண்ணன், சோழன் செய்த வேலை - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, என்னுடைய ஆபீஸில் நம்முடைய வீட்டைப் பற்றி சொன்னேன். அவர்கள் வீட்டை பார்க்க வருகிறார்கள் என்றார். இதைக் கேட்டவுடன் சேரன் சரி என்றார். ஆனால், சோழன் மட்டும் சோகத்தில் இருந்தார். இதை பார்த்த அவருடைய அண்ணன், என்ன நடந்தது? என்று கேட்டார். அப்போது சோழன், நிலா விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி சொன்னார். பின் வீட்டிற்கு நிலாவின் பாஸ் வந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே நிலா அறிமுகம் செய்து வைத்தார். சோழனையும் அண்ணன் என்பது போல சொல்லி இருந்தார். அதனால் சோழனுக்கு பயங்கர கோபம்.
பின் பாஸ் ராகவ், நிலா வீட்டை பார்த்து ரொம்பவே ஆச்சரியப்பட்டார் . நிலா, வீட்டை எல்லாம் சுத்தி காண்பித்து சொல்லி கொண்டு இருந்தார். இது எல்லாம் பார்த்த சோழனுக்கு பயங்கர கடுப்பாகி தன் அண்ணனிடம் சென்று புலம்பி கொண்டிருந்தார். சோழன், காதலர் தினம் வருவதற்குள் என்னுடைய காதலை எப்படியாவது நிலாவிடம் சொல்லி புரிய வைப்பேன். அவள் வாயாலே என்னை காதலிக்கிறேன் என்று சொல்ல வைப்பேன் என்றெல்லாம் சபதம் போட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அய்யனார் துணை:
நேற்று எபிசோட்டில் சோழன், இனி நிலா உன்னை அண்ணா என்று கூப்பிட கூடாது.. நீயே அவளிடம் எடுத்து சொல்லி புரிய வை என்று தன்னுடைய சேரன் அண்ணனிடம் சொன்னார். அதுக்குப்பின் சேரன், இனிமேல் நீ என்னை அண்ணா என்று அழைக்காதே என்றார். இதைக் கேட்டு வேதனைப்பட்ட நிலா, கதறி அழுதார். உடனே சேரன், நீ எனக்கு தங்கை, நான் உனக்கு அண்ணா தான். உன்னுடைய குழந்தைங்களுக்கும் தாய் மாமன் நான் தான். என்னுடைய மடியில் தான் குழந்தைகளுக்கு காது குத்தணும் என்றெல்லாம் பாசமலர் கதையை ஓட்டினார்கள்
நேற்று எபிசோட்:
இதெல்லாம் பார்த்து சோழனுக்கு பயங்கர கடுப்பானது. பின் தன் அண்ணனை அழைத்து திட்டிய சோழன், நான் உனக்கு தம்பி இல்லை என்று எப்படியாவது நிலாவிடம் சொல்லுங்க என்றார். அதற்குப்பின் நிலாவிடம் சேரன், இவன் எனக்கு தம்பி கிடையாது. மாமன் பையன். உனக்கும் முறைமாமன் தான் என்று சொன்னார். இதெல்லாம் நிலவிற்கு ஒண்ணும் புரியவில்லை. நிலா, உங்களுக்கு அப்பா அம்மா வேறு வேறா? என்று கேட்டவுடன் சேரன் சுதப்பி விட்டார். பின் சோழன் எதையோ சொல்லி நிலாவை அனுப்பி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் நிலா, வீட்டில் உள்ள எல்லோரையுமே அலைத்து தன்னுடைய விவாகரத்து விஷயத்தை பற்றி சொல்கிறார். எல்லோருக்குமே ஷாக் ஆக இருக்கிறது. சோழன் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கிறார். சேரன் எடுத்து சொல்லியுமே நிலா கேட்கவில்லை. நிலா, இது பொய்யான திருமணம் தான். விவாகரத்து செய்து கொள்வது தான் சரி என்கிறார். சோழன் சோகத்தில் இருப்பதால் சேரன் ஆறுதல் சொல்கிறார். ஆனால், சோழன் தன்னோட அண்ணன் மீது கோபப்பட்டு அங்கிருந்து செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த வானதியின் அண்ணன் கோபப்பட்டு வீட்டில் தன்னோட பெற்றோர்களிடம் சொல்கிறார். இதனால் வானத்தின் அப்பா, அம்மா இருவருமே பாண்டியனையும், அவர் குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசுகிறார்கள். இருந்தாலும் வானதி விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். அதற்குப்பின் வானதி அண்ணன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பாண்டியன் வீட்டிற்கு செல்கிறார். அப்போது சேரன், அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் சேர்த்து வைத்து விடலாம் என்று சொல்கிறார். அதனால் கோபப்பட்ட வானதியின் அண்ணன் தவறாக பேசுகிறார். அதனால் கோபத்தில் சோழன் அடிக்கிறார். இருவருக்கும் இடையே அடிதடி ஆகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.