ஜெயந்தி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன சேரன், நிச்சயதார்த்தம் நடந்ததா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழனை அடித்தது போல நிலா கனவு தான் காண்கிறார். பின் சோழன், காயத்ரியை பார்க்க போவதாக வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். அதற்குப்பின் பஸ் ஸ்டாண்டில் சோழன், காயத்ரியிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவிற்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால், எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து ஆட்டோவில் சென்று விடுகிறார் நிலா. இதை பார்த்து சோழன் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் நிலா வேலை செய்யும் இடத்திற்கு வந்த சேரன், தரகர் சொன்ன பெண்ணை பார்த்து பேசி விட்டு வந்தேன்.
அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். வீட்டில் நீதான் தம்பிகளிடம் சொல்ல வேண்டும் என்றார். முதலில் நிலாவிற்கு ஷாக் ஆக இருந்தாலும் சேரன் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதற்கு சந்தோஷப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனை வீடு முழுக்க சுத்தம் செய்ய சொன்னார். பின் பல்லவன்- பாண்டியன் எல்லோரையும் வரவைத்து சேரன் திருமணம் பற்றி சொன்ன விஷயத்தை சொன்னார். இதை கேட்டு தம்பிகள் மூவருக்குமே ஷாக்காக தான் இருந்தது.
அய்யனார் துணை:
சேரன் யாருக்குமே தெரியாமல் பெண் பார்த்த விஷயத்தால் வீட்டில் உள்ள எல்லோருமே வருத்தப்பட்டார்கள். பின் நிலா, பெண் வீட்டில் வருவதால் வீட்டையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு வேலையாக செய்யுங்கள் என்றார். அந்த சமயம் பார்த்து காயத்ரி போன் செய்ததால் சோழன், நிலாவை வெறுப்பேற்றுவதற்காகவே வேலை செய்யாமல் காயத்ரியிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதெல்லாம் பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது. அதற்குப்பின் பெண் வீட்டில் வந்து விட்டார்கள். அப்போது எல்லோருமே கல்யாணப் பெண் வரவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது ஜெயந்தி, நான் தான் கல்யாணப்பெண். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையெல்லாம் நான் சேரனிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. அதோடு மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு மூணு வயது அதிகம் என்று சொன்னவுடன் நடேசனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் பெண் வீட்டில் சீக்கிரமாகவே நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் சேரன் ஒத்துக் கொண்டார். ஆனால், இதில் யாருக்குமே விருப்பமில்லை. பெண் வீட்டார் சென்றவுடன் எதற்காக இந்த அவசர கல்யாணம்? ஏன் இப்படி? என்றெல்லாம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள். சேரன் எதுவும் சொல்லாமல் திணறினார்.
https://www.youtube.com/watch?v=F0YWMLnaBx0
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேரன் குடும்பத்தில் எல்லோருமே நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி ஜெயந்தி வீட்டுக்கு போகிறார்கள். அப்போது ஜெயந்தி அப்பா, தரகர் உங்களிடம் எதுவும் சொல்லவில்லையா? என்று கேட்கிறார். அதற்கு சோழன், எதுவும் சொல்லவில்லை என்கிறார். அதற்கு ஜெயந்தி அப்பா, எங்களுக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் விருப்பமில்லை. என் மகள் அவருடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார் என்று சொல்கிறார். இதை கேட்ட நிலா, நீங்கள் சொல்லிதானே வந்தோம். எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று கோபப்படுகிறார். இதையெல்லாம் கேட்டு சேரன் அதிர்ச்சியில் உட்கார்ந்து இருக்கிறார்.