ஜெயந்தி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன சோழன்-நிலா, சேரன் நிலைமை என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ஜெயந்தி, நான் தான் கல்யாணப்பெண். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இதையெல்லாம் நான் சேரனிடம் சொல்லிவிட்டேன் என்றார். இதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆனது. அதோடு மாப்பிள்ளையை விட பெண்ணுக்கு மூணு வயது அதிகம் என்று சொன்னவுடன் நடேசனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. பின் பெண் வீட்டில் சீக்கிரமாகவே நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று சொன்னவுடன் சேரன் ஒத்துக் கொண்டார். ஆனால், இதில் யாருக்குமே விருப்பமில்லை. பெண் வீட்டார் சென்றவுடன் எதற்காக இந்த அவசர கல்யாணம்? ஏன் இப்படி? என்றெல்லாம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள். சேரன் எதுவும் சொல்லாமல் திணறினார்.
நிலா, எதற்காக அவசர அவசரமாக கல்யாணம் செய்யணும். யோசித்து, நன்றாக பேசி முடிவெடுத்து பண்ணலாம் என்றெல்லாம் சொன்னார். அதற்கு சேரன், இந்த கல்யாணம் எனக்கு ரொம்ப முக்கியம். சீக்கிரம் செய்யணும் என்று பாண்டியனை மனதில் வைத்துக்கொண்டு சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைத்தும் சேரன் கேட்கவில்லை. பின் சேரனை தனியாக சந்தித்து நிலா பேசி இருந்தார். ஆனால், சேரன் அப்பவும் உண்மை சொல்லாமல் ஏதோ சொல்லி சமாளித்தார். அதற்குப்பின் நிலா வேலைக்கு கிளம்பும்போது சோழன், நீங்கள் பஸ் ஸ்டாண்டிற்கு என்னுடன் வாருங்கள்.
அய்யனார் துணை:
ஒன்றாக போகலாம் என்றார். அதற்கு நிலா, எதற்காக என்னை பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்லி கட்டாயப் படுத்துகிறீர்கள் என்று கேட்டார். அங்கு தான் என்னுடைய காயத்ரி இருக்கிறார் என்று சோழன் சொன்னார். இதனால் கோபப்பட்ட நிலா ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு போனார். ஆனால், வழியிலேயே நிலா வண்டி நின்றது. பின் சோழன், நிலாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்றார். அங்கு வானதி இருந்தார். அப்போது பாண்டியன் , சேரன் நிச்சயதார்த்தத்தை பற்றி சொன்னார். அப்போது சோழன்- நிலா, அவசரமாக ஏன் நடத்துகிறார்கள்? புரியவில்லை என்றார்கள். அதற்கு வானதி, அவருக்கு கல்யாணம் நடந்தால் நல்லது தானே என்று சுயநலமாக பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, கல்யாணமே ஆகாமல் இருப்பதற்கு கல்யாணம் ஆன பின் வரும் பிரச்சனைகளை பார்த்துக் கொள்ளலாமே என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு பாண்டியனுக்கு கோபம் வருகிறது. எங்கள் அண்ணனுக்கு கல்யாணம் முக்கியம் தான். அதுக்காக அவருக்கு ஏனோ தானோ என்று கல்யாணத்தை செய்து வைக்க முடியாது என்று சொல்வதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி வானதி சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் சோழன், தரகரிடம் ஜெயந்தி போன் நம்பரை வாங்கி சேரன் இடம் கொடுத்து பேச சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் ஜெயந்தியை ஒரு கடைக்கு வர சொல்கிறார் சோழன். பின் அந்த இடத்திற்கு சோழன் - நிலா இருவருமே செல்கிறார்கள். அப்போது நிலா, திருமணம் சீக்கிரமாக நடப்பதை பற்றி விசாரிக்கிறார். ஜெயந்தி, தன்னுடைய முன்னாள் கணவரை வெறுப்பேற்றுவதற்காக தான் திருமணம் செய்கிறேன் என்று எல்லா விஷயத்தையும் சொல்கிறார். இதைக் கேட்டு சோழன்- நிலாவிற்கு ஷாக்காக இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதி- பாண்டியன் இருவருமே சண்டை போட்டவதை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.