பிரச்சனையில் மாட்டி கொண்டு தவிக்கும் கார்த்திகா, உண்மை அறிந்தாரா சேரன்? அய்யனார் துணை

பிரச்சனையில் மாட்டி கொண்டு தவிக்கும் கார்த்திகா

By subhashini · 19/6/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, தன்னுடைய அப்பா அம்மாவிடம் பணம் கேட்டு பேசிய விஷயத்தைப் பற்றி சொன்னார். பாண்டியன், அவர்களும் உனக்காக எவ்வளவோ செலவு செய்து விட்டார்கள். நீ இன்னும் அவர்களை கஷ்டப்படுத்தாதே. நகை கொடுத்தால் அதை வைத்து நீ கடனை வாங்கு. அதற்கு பின் அந்த நகையையும் நீயே மீட்டுக் கொடு என்றெல்லாம் அறிவுரை சொன்னார். பாண்டியன் சொன்ன அறிவுறுத்தலின்படி வானதி ஒத்துக் கொண்டார். பின் இதைப் பற்றி வானதி தன்னுடைய அப்பா, அம்மாவிடமும் சொல்கிறார். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய குடும்பத்தை பற்றி எமோஷனலாக பேசியிருந்தார்.

சோழனும் அவருக்கு ஆறுதல் சொன்னார். பின் அய்யனார் குடும்பத்தில் எல்லோருமே கிளம்பி ரிசப்ஷனுக்காக சென்னை சென்றார்கள். அங்கு நிலா, தன்னுடைய அம்மா அண்ணி உடன் சேர்ந்து புடவை எடுக்க போனார். சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோரையுமே அலைத்துக் கொண்டு மனோகர் சென்றார். அவர்கள், துணிக்கடை பெரிதாக இருப்பதாகவும், விலை எல்லாம் அதிகமாக இருப்பதை பற்றி எல்லாருமே வாயை பிளந்து பேசிக்கொண்டார்கள். இது எல்லாம் பார்த்து மனோகருக்கு கடுப்பாகிறது. அது மட்டும் இல்லாமல் சோழனின் குடும்பத்தை ரொம்ப ஏளனமாகவும் கேவலமாகவும் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அது அறியாமல் சோழன் குடும்பம் துணிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அய்யனார் துணை:

சோழன் குடும்பத்தில் யார் துணிகளை எடுத்து ரேட்டை பார்த்தாலுமே மனோகர் கிண்டல் கேலி செய்தார்கள். இதை பார்த்து சேரன், தன்னுடைய தம்பிகளை அழைத்துக் கொண்டு தன்னுடைய வசதிக்கேற்றவாறு துணிகளை வாங்கிக் கொடுத்தார். இது எல்லாம் சோழன் கவனித்து விட்டார். அதற்குப்பின் சோழன் நிலாவிற்கு துணிகளை செலக்ட் பண்ணுகிறார். அதற்குப்பின் கடையில் இருந்து கிளம்பும்போது சாப்பிட சொன்னார்கள். அப்போது சோழன், இலவசமாக சாப்பிட தான் இங்கு வருவீர்களா? என்று தன்னுடைய மனோகருக்கு பதிலடி கொடுத்தார். பின் ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு ரேட்டை பார்த்து சோழன் குடும்பத்தில் எல்லோரும் வாயை பிளந்தார்கள். உடனே மனோகர், நான்தான் பில் கட்டப் போகிறேன். தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என்றார். இதை பார்த்து சோழனுக்கு கடுப்பானது.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோகர் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரிய பணக்காரர்கள் போல சாப்பாடு ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், நிலா மட்டும் தனக்கு தேவையானதை சொல்கிறார். பின் நிலா சொன்னதை கேட்டு சோழன் குடும்பத்தில் எல்லோருமே தனக்கு பிடித்தது சொல்கிறார்கள். அதை மனோகர் கிண்டல் செய்கிறார். அதற்குப்பின் வரவேற்பு விழாவிற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று நிலாவின் அம்மா தேன்மொழி கேட்கிறார். நாங்கள் மட்டும்தான் என்று சோழன் சொல்கிறார். அதற்கு தேன்மொழி, உறவினர் இல்லை என்றால் எப்படி என்கிறார். உடனே சேரன், ஒரு பத்து பேர் வருவார்கள் என்கிறார். அதற்குப்பின் சோழன், பாண்டியன் இருவரும் வானதியின் வீட்டிற்கு சென்று வரவேற்பு விழாவிற்காக அழைக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அவர்களுமே ஒத்துக் கொள்கிறார்கள். அதற்கு பின் சேரன், கார்த்திகாவின் வீட்டிற்கு சென்று சோழனின் ரிசப்ஷனுக்காக அழைக்கிறார். கார்த்திகா ரொம்பவே சோகமாக இருக்கிறார். கார்த்திகாவின் அம்மாவும் ஏதோ பிரச்சனை வேதனையில் இருக்கிறார்கள். ஆனால், அதை இருவருமே வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார்கள். சேரனுக்கும் கார்த்திகாவின் செயல்களை கண்டு சந்தேகம் வருகிறது. ஆனால், கார்த்திகா ஏதோ சொல்லி சமாளிக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சோழனுடைய ரிசப்ஷன் நினைத்து ரொம்பவே சந்தோஷப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full