கார்த்திகா சொன்ன விஷயத்தை கேட்டு உடைந்து போன சேரன், நிலா போட்ட கண்டிஷன் - அய்யனார் துணை
கார்த்திகா சொன்ன விஷயத்தை கேட்டு உடைந்து போன சேரன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சேரன் குடும்பத்திற்காக ஒரு ரூமை ஏற்பாடு செய்து தரச் சொன்னார். அதற்கு பின் நிலா பங்ஷனுக்கு ரெடியாக சென்றார். மனோகர் இது தான் சந்தர்ப்பம் என்று சோழன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் வேலை வாங்க திட்டம் போட்டார். முதலில் பாண்டியன், பல்லவன் இருவரையும் சேர்களை அடுக்கி வைக்க சொன்னார். சேரனை சமையல் செய்ய சொல்கிறார். பின் வந்திருக்கும் உறவினர்கள் எல்லாம் ஜூஸ் கொடுக்க சொன்னார். சோழன் குடும்பத்தையே ரொம்ப அவமரியாதையாக மனோகர் நடத்திக் கொண்டிருந்தார். பின் நிலா, தன் அப்பாவுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.
நிலா, தன்னுடைய பெற்றோர் பேச்சை மீறி மீண்டும் அய்யனார் குடும்பத்துடன் சேர்ந்து சென்னைக்கு கிளம்பினார். இதனால் மனோகர் ரொம்பவே வருத்தப்படுகிறார். சென்னை வரும் வழியில் அய்யனார் குடும்பத்தில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக பாட்டு பாடி, கிண்டல் கேலி என்று வந்தார்கள். இன்னொரு பக்கம் வானதியின் பெற்றோர்கள் நிலாவின் வீட்டில் ஏற்பாடு செய்த ஃபங்ஷன் பற்றியும், நிலா நடந்து கொண்ட விதத்தையும் பற்றி ரொம்ப பெருமையாக பேசி இருந்தார்கள்.
அய்யனார் துணை:
இதனால் கொந்தளித்த வானதி, வழக்கம்போல நிலாவின் மீதுள்ள பொறுமையால் தன்னுடைய பெற்றோர்களை திட்டினார். அதற்குப்பின் வானதி அப்பா, நகையை அடமானம் வைத்து கொண்டு வந்த பணத்தை மெடிக்கல் ஷாப் வைக்க வானதியிடம் கொடுத்தார். அதை பார்த்தவுடன் வானதி ரொம்பவே சந்தோசப்பட்டார். அதற்குப்பின் நிலா, வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் ஒவ்வொருவராக பிரித்து கொடுத்து வேலையை வாங்கிக் கொண்டிருந்தார். நிலாவிற்கு பயந்து கொண்டு எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா வீட்டில் உள்ள எல்லோரையுமே அழைத்து, இனிமேல் உங்களுடைய சம்பள பணத்தில் ஒரு பகுதியை வீட்டிற்கு கொடுக்க வேண்டும். வீட்டில் நிறைய வேலைகள் இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். இனிமேல் வீட்டிற்கு வர போகும் பெண்களுக்காக அதை செய்தாக வேண்டும் என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஒத்துக்கொள்கிறார்கள். அதற்குப்பின் பாண்டியன், வானதியை அழைத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப் வாங்குவதற்கு அட்வான்ஸ் தொகை கொடுத்து விடுகிறார். அவர்களுமே டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு விடுகிறார்கள். வானதி ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் கார்த்திகா-சேரன் பேசி கொண்டு வருகிறார்கள். அப்போது சேரன், உனக்கு என்ன பிரச்சனை? நீ ஒரு மாதிரியாக இருக்கிறாய். எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல் என்று கேட்கிறார். இதனால் கார்த்திகா, கல்யாணமான சில நாட்கள் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். பிறகு என்னுடைய நகைகளை எல்லாம் அடமானம் வைத்து அவர்களுடைய கடனை அடைத்து விட்டார்கள். அவர்களுக்கு சொந்த வீடு கூட இல்லை. அவர்களை பற்றி விசாரித்தது எல்லாமே பொய். என்னுடைய மாமனார், மாமியார் ரொம்பவே கொடுமைப்படுத்துகிறார்கள். என்னுடைய கணவரும் அதை பற்றி கேட்கவில்லை. அவருக்கு வேறு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. விவாகரத்து கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். நானும் விவாகரத்து கொடுத்துவிடலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். என்னுடைய கல்யாண வாழ்க்கை அவ்வளவுதான் என்று எமோஷனாக அழுது கொண்டே பேசினார். இது கேட்டு சேரன் உடைந்து போகிறார்.