குலதெய்வ கோயிலில் பிரச்சனை செய்யும் கார்த்திகா அம்மா, சேரன் குடும்பம் செய்தது என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சோழன் எல்லோருமே நாங்கள் சாமி கும்பிட்டு போய் விடுவோம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்றார்கள். பின் இதைப்பற்றி கார்த்திகாவின் அம்மா, தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து விசாரித்தார். அதற்கு அவர், குல தெய்வமே என் கனவில் வந்து சொன்னது. அதனால் தான் நான் வழி சொன்னேன். நீ எதையும் கண்டுக்காதே என்றார். பின் ரூமிற்கு சென்று எல்லோரும் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
நிலா சமைப்பதற்காக கிச்சனுக்கு சென்னார். ஆனால், அங்கு கார்த்திகாவின் அம்மா சமைக்க விடாமல் நிலாவை திட்டினார். அப்போது வந்த சோழன், எதற்காக நீங்கள் சமைக்கிறீர்கள்? நான் ஹோட்டலில் வாங்கி கொண்டு வருகிறேன் என்று எல்லோருக்குமே சாப்பாடு வாங்கி வந்து கொண்டு வந்தார். அதற்குப்பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கார்த்திகாவும் அவருடைய கணவருமே சாப்பிட்டார்கள். இதை பார்த்து கார்த்திகாவின் அம்மா கோபப்பட்டு திட்டினார்.
அய்யனார் துணை:
அதற்குப்பின் மறுநாள் அய்யனார் கோவிலுக்கு கிளம்புவதற்காக எல்லாருமே தயாரானார்கள். அப்போது சோழன் வேஷ்டி போட்டு வந்தார். அதை பார்த்த அவர் தம்பிகள், எதற்கு வேஷ்டி என்று கேட்டார்கள். அதற்கு சோழன், நிலா கண்டிப்பாக புடவையில் தான் வருவார். அதற்காகத்தான் நான் வேஷ்டி கட்டினேன் என்று சொன்னார். சோழன் சொன்னது போலவே நிலா சேலையில் தான் வந்தார். சோழன், நிலாவை பார்த்து வழிந்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா புடவை அணிந்து வந்ததால் சோழன் அவருக்காக பூ வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். பின் அங்கு வந்த கார்த்திகா அம்மா வழக்கம் போல சேரன் குடும்பத்தை திட்டி விட்டு கோயிலுக்கு செல்கிறார். அதற்குள்ளே சேரன் குடும்பத்தில் எல்லோருமே தங்களின் குலதெய்வமான அய்யனார் கோயிலுக்கு சென்று விட்டு பூஜை செய்கிறார்கள். அப்போது வந்த கார்த்திகா அம்மா, கோயிலில் இருக்கும் பூசாரி புதுசாக வந்தவர்களுக்கெல்லாம் முன்னுரிமை கொடுப்பதா? என்றெல்லாம் வம்பு இழுக்கிறார். அதற்குப்பின் கோயிலுக்கு வரி கட்ட வேண்டும் என்று பூசாரி சொல்வதால் சேரன் ஒத்துக் கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே கார்த்திகாவின் அம்மாவும், அங்கிருந்த சில பெண்களுமே புதிதாக வந்தவர்களுக்கு எல்லாம் உரிமை கிடையாது. அவர்களை கோயிலை விட்டுப் போக சொல்லுங்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். பின் ஒரு வழியாக போராடி சேரன் குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்கும் வரி கட்டுவதற்கும் ஒத்துக்கொள்கிறார்கள். இது எல்லாம் பார்த்து கார்த்திகா அம்மாவிற்கு கோபம் தான் வருகிறது. பின் கோவிலில் திருவிழா இருப்பதால் அங்கேயே தங்கி சாமி கும்பிட்டு போக சொல்கிறார்கள். அதனால் சேரன் குடும்பம் அங்கே தங்குகிறது. பின் நிலா-சோழன் இருவருமே ஊரை சுற்றி பார்க்க போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது