குலதெய்வ கோவிலில் பிரச்சனை செய்யும் கார்த்திகா அம்மா, அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன் கல்லூரிக்கு செல்லும்போது ஒரு பெண் அவரை பார்த்துக்கொண்டிருந்தார். பின் பல்லவன், அந்த பெண்ணிடமே விசாரிக்க, அவர் சிரித்துக் கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பின் சேரன் - சோழன் இருவருமே வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது சேரனின் பெரியப்பா, திண்டுக்கல்லில் ஓட்டம்சத்திரத்தில் உள்ள அய்யனார் சாமி தான் நம்மளுடைய குலதெய்வம். நீ மட்டும் போய் சாமி கும்பிட்டு வா என்றார்.
அப்போது சோழன் பிளாஷ்பேக்கை நினைத்து பார்த்தார். சோழன் தான் ஒரு ஜோசியரை வைத்து குலதெய்வ சாமி இருக்கும் இடத்தை சொல்ல சொல்லி மிரட்டி இருந்தார். அதனால் தான் பயந்து போய் பெரியப்பா உண்மையை சொன்னார். பின் வீட்டிற்கு வந்த சேரன், குலதெய்வசாமி கோயில் இருக்கும் இடத்தை பற்றி சொன்னார். எல்லோருமே சந்தோஷப்பட்டு கோவிலுக்கு போகலாம் என்று இருந்தார்கள். அப்பொழுது நடேசன், நம்முடைய குலதெய்வ சாமி கோயில் திண்டுக்கல் பக்கம் ஒட்டச்சத்திரத்தில் இருக்கும் அய்யனார் தான் என்றார். இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லாருமே ஷாக் ஆனார்கள்.
அய்யனார் துணை:
நடேசன், எனக்கு குலதெய்வம் அய்யனார் கனவில் வந்து கோயிலுக்கு வர சொன்னார். அதனால் தான் சொன்னேன் என்றார். பின் எல்லோருமே குலதெய்வ கோயிலுக்கு செல்ல தயாரானார்கள். நடேசனை அழைத்துப் போக வேண்டாம் என்று சோழன் சொன்னார். அதற்கு நிலா, உங்கள் அப்பா அழைத்துக் கொண்டு போகலாம் என்றார். பின் சந்தாவையும் குலதெய்வ கோயிலுக்கு அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் எல்லோருமே காரில் ஜாலியாக பேசிக்கொண்டு போகிறார்கள். சோழன், நிலாவிற்காக பாட்டு வைத்து என்னென்னவோ சிக்னல் கொடுக்கிறார். நிலா, சந்தாவிடம் தான் பேசிக் கொண்டு வருகிறார். பின் ஒரு வழியாக தங்களுடைய குலதெய்வ கோயில் இருக்கும் இடத்திற்கு சோழன் குடும்பத்தினர் வந்து விடுகிறார்கள். ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே கார்த்திகா குடும்பத்தில் இருப்பவர்கள் வந்திருக்கிறார்கள். இதை பார்த்து கார்த்திகாவின் அம்மா பயங்கரமாக சண்டை போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே சேரன், சோழன் எல்லோருமே நாங்கள் சாமி கும்பிட்டு போய் விடுவோம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்று சொல்கிறார்கள். பின் இதைப்பற்றி கார்த்திகாவின் அம்மா, தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அதற்கு அவர், குல தெய்வமே என் கனவில் வந்து சொன்னது. அதனால் தான் நான் வழி சொன்னேன். நீ எதையும் கண்டுக்காதே என்று சொல்கிறார். பின் ரூமிற்கு சென்று எல்லோரும் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.