நிலாவை வம்பிழுக்கும் கார்த்திகா அம்மா, சோழன் கொடுத்த பதிலடி - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன், எனக்கு குலதெய்வம் அய்யனார் கனவில் வந்து கோயிலுக்கு வர சொன்னார். அதனால் தான் சொன்னேன் என்றார். பின் எல்லோருமே குலதெய்வ கோயிலுக்கு செல்ல தயாரானார்கள். நடேசனை அழைத்துப் போக வேண்டாம் என்று சோழன் சொன்னார். அதற்கு நிலா, உங்கள் அப்பா அழைத்துக் கொண்டு போகலாம் என்றார். பின் சந்தாவையும் குலதெய்வ கோயிலுக்கு அழைத்துக் கொண்டு செல்ல முடிவெடுத்தார்கள்.
எல்லோருமே காரில் ஜாலியாக பேசிக்கொண்டு போனார்கள். சோழன், நிலாவிற்காக பாட்டு வைத்து என்னென்னவோ சிக்னல் கொடுத்தார். நிலா, சந்தாவிடம் தான் பேசிக் கொண்டு வந்தார். பின் ஒரு வழியாக தங்களுடைய குலதெய்வ கோயில் இருக்கும் இடத்திற்கு சோழன் குடும்பத்தினர் வந்து விட்டார்கள். ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே கார்த்திகா குடும்பத்தில் இருப்பவர்கள் வந்திருந்தார்கள். இதை பார்த்து கார்த்திகாவின் அம்மா பயங்கரமாக சண்டை போட்டார்.
அய்யனார் துணை:
உடனே சேரன், சோழன் எல்லோருமே நாங்கள் சாமி கும்பிட்டு போய் விடுவோம். தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்றார்கள். பின் இதைப்பற்றி கார்த்திகாவின் அம்மா, தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து விசாரித்தார். அதற்கு அவர், குல தெய்வமே என் கனவில் வந்து சொன்னது. அதனால் தான் நான் வழி சொன்னேன். நீ எதையும் கண்டுக்காதே என்றார். பின் ரூமிற்கு சென்று எல்லோரும் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா சமைப்பதற்காக கிச்சனுக்கு செல்கிறார். ஆனால், அங்கு கார்த்திகாவின் அம்மா சமைக்க விடாமல் நிலாவை திட்டுகிறார். அப்போது வந்த சோழன், எதற்காக நீங்கள் சமைக்கிறீர்கள்? நான் ஹோட்டலில் வாங்கி கொண்டு வருகிறேன் என்று எல்லோருக்குமே சாப்பாடு வாங்கி வந்து கொண்டு வந்தார். அதற்குப்பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கார்த்திகாவும் அவருடைய கணவருமே சாப்பிடுகிறார்கள். இதை பார்த்து கார்த்திகாவின் அம்மா கோபப்பட்டு திட்டுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மறுநாள் அய்யனார் கோவிலுக்கு கிளம்புவதற்காக எல்லாருமே தயாராகிறார்கள். அப்போது சோழன் வேஷ்டி போட்டு வந்தார். அதை பார்த்த அவர் தம்பிகள், எதற்கு வேஷ்டி என்று கேட்டார்கள். அதற்கு சோழன், நிலா கண்டிப்பாக புடவையில் தான் வருவார். அதற்காகத்தான் நான் வேஷ்டி கட்டினேன் என்று சொல்கிறார். சோழன் சொன்னது போலவே நிலா சேலையில் தான் வந்தார். சோழன், நிலாவை பார்த்து வழிந்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.