காயத்ரி காதலை அவாய்ட் பண்ணும் சோழன், நடேசனை கவனித்து கொள்ளும் நிலா - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, ராகவ் காபி சாப்பிட அழைத்த விஷயத்தையும் சொல்ல, சோழன் கோபப்பட்டார். அதற்குப்பின் காயத்ரி பர்த்டே பார்ட்டிக்கு போக சோழன் தயாராகுவதற்கு அலப்பறை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து நிலாவிற்கு பயங்கர கடுப்பானது. பின் சோழன் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார். அங்கு காயத்ரியின் நண்பர்கள் எல்லோருமே வந்துவிட்டார்கள். பின் காயத்ரி தன்னுடைய நண்பர்களிடம் சோழனை அறிமுகம் செய்துவிட்டு கேக் வெட்டி இருந்தார். சோழன், ஒரு ரோஜா பூவை கொடுக்கிறார். காயத்ரி உண்மையாலுமே காதலித்தார்.
காயத்ரி, இவர்தான் என்னுடைய ஆளு. நான் தான் முதலில் காதலை சொன்னேன் என்றெல்லாம் தன்னுடைய நண்பர்களிடம் சென்றார். இதை கேட்டு சோழனுக்கு அடி வயிற்றில் புலி கரைப்பது போல் இருக்கிறது. பின் சோழன் எஸ்கேப் ஆகி வெளியே வந்து விட்டார். பின் சோழன், நாம் ஒன்று நினைத்தால் என்னவோ நடக்கிறது என்று பயத்தில் புலம்பி கொண்டு வீட்டிற்கு வந்தார். சோழனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. குழப்பத்திலேயே பேசிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் கிச்சனில் நிலா, சேரன் இருவரும் சமைத்துக் கொண்டு இருந்தார்கள்.
அய்யனார் துணை:
அப்போது சேரன், ஆலு செய்யப் போகிறேன் என்று சொன்னவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே கலாய்த்தார்கள். அதற்குப் பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. இதை பார்த்து பதறிப் போன நிலா, ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்றார். ஆனால் நடேசன் வரவில்லை. பின் வீட்டில் இருக்கும் மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொன்னார். நிலா, நடேசனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சேரனிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் சோழன் வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது காயத்ரி விடாமல் போன் செய்து கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் காயத்ரி விடாமல் சோழனுக்கு போன் செய்து கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சோழன், என்னதான் பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு காயத்ரி, எதற்காக என்னை அவாய்ட் பண்ணுகிறீர்கள்? என்கிறார். அதற்கு சோழன், திடீரென்று உன் நண்பர்களிடம் என்னை காதலன் என்று அறிமுகம் செய்து வைக்கிறாய். நான் எப்போது உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னேன் என்கிறார். அதற்கு காயத்திரி, எனக்கு உங்களை பிடித்திருந்தது என்று சொல்லிதானே உங்களிடம் பேச ஆரம்பித்தேன்.
நீங்களும் என்னை காதலிக்கிறீர்கள் என்று நினைத்தேன். இப்போது இல்லை என்று சொல்கிறீர்கள். என்ன நடந்தது? எதற்காக இப்படி மாறிவிட்டீர்கள் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
சீரியல் ட்ராக்:
ஒரு கட்டத்தில் கடுப்பான சோழன் போனை ஆப் செய்து வருகிறார். இதனால் காயத்ரி ரொம்ப எமோஷனாக அழுது கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் சந்தோஷமாக பேசுகிறார்கள். கடைசியில் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொள்கிறார். அப்போது வீட்டிற்கு சோழன் வருகிறார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது