சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை - அய்யனார் துணை

By subhashini · 2/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொண்டார். அப்போது வீட்டிற்கு சோழன் வருகிறார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டார்.

நிலா ரெடியாகி வேலைக்கு கிளம்பினார். பல்லவன், பஸ் ஸ்டாண்டில் சோழனுக்காக காயத்ரி போன் மேல் போன் செய்தார். இதனால் சோழன், போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அதனால் சோழனின் ஓனர், வீட்டுக்கே வந்து வண்டி புக் செய்து இருந்தார்கள். வேலைக்கு கிளம்பு என்று சொல்லிவிட்டார். அதனால் சோழன் வேலைக்கு தயாராகினார். இன்னொரு பக்கம் பஸ்டாண்டில் சோழன் போன் எடுக்காததால் காயத்ரி, பல்லவனிடம் விசாரித்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று பல்லவன், காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
காயத்ரியை பார்த்தவுடன் சோழனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

அய்யனார் துணை:

அப்போது காயத்ரி, ஏன் போன் எடுக்கவில்லை. எதற்காக என்னை அவாய்ட் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்டார். இதை கேட்டு சேரனுக்கு ஷாக்காக இருந்தது. காயத்ரியை தனியாக அழைத்து சென்று சோழன் பேசி இருந்தார். அதற்குப்பின் பாண்டியன், சோழனை காயத்ரி காதலிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சேரனுக்கு இன்னும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. இன்னொரு பக்கம் சோழன், எனக்கும் உங்களுக்கும் செட்டாகாது. நான் உங்களை காதலிக்கவே இல்லை என்றார். அதற்கு காயத்ரி, நான் உங்களிடம் ஆரம்பத்திலே காதலிக்கிறேன் என்று சொல்லி தான் பழகினேன் என்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் தான் காதலிக்கவில்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், காயத்ரி கேட்கவே இல்லை. உடனே அங்கு வந்த சேரன், அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. இந்த விஷயம் தெரியாதா? என்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான காயத்ரி, உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? ஏன் என்னிடம் சொல்லவில்லை? நன்றாக தானே என்னிடம் பேசினீர்கள். இப்படி என்னை ஏமாற்றி விட்டீர்களே, என் நிலைமை என்ன? என்றெல்லாம் சொல்லி அழுது கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். சோழனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சேரன் அந்த பெண்ணை தேடி போகிறார்.

சீரியல் ட்ராக்:

ரோட்டில் காயத்ரி அழுது கொண்டிருக்கிறார். அப்போது சேரன், சோழன் செய்தது தவறு தான். நீ எதையும் யோசிக்காதே என்றெல்லாம் அறிவுரை சொல்லி அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறார். பின் இந்த விஷயத்தை எல்லாம் பல்லவன் நிலாவிற்கு போன் செய்து சொல்கிறார். கோபத்தில் நிலா, தேவையில்லாத வேலை செய்தால் அனுபவித்து தான் ஆகணும். சோழன் அவஸ்தைப்படட்டும் என்று திட்டி போனை வைத்து விடுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி இருவரும் போனில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வானதி வழக்கம் போல் பாண்டியனை வம்பு இழுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full