சோழன் குடும்பத்தை கேவலமாக பேசும் மனோகர், சோகத்தில் நிலா - அய்யனார் துணை
சோழன் குடும்பத்தை கேவலமாக பேசும் மனோகர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா-சோழன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது போன் செய்த மனோகர், இருவருக்குமே வீட்டில் சிம்பிளாக ரிசப்ஷன் வைக்க இருக்கிறேன். மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு வந்து விடு என்றார். நிலா, அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டார். பின் சோழனும் முதலில் ரிசப்ஷன் வேண்டாம் என்றார். இருந்தாலும் நிலாவின் அப்பா கட்டாயப்படுத்தியதால் ஒத்துக் கொண்டார். ஆனால், இதில் நிலாவிற்கு விருப்பமே இல்லை.
பாண்டியன்,வானதி இருவரும் மெடிக்கல் ஷாப்க்கு சென்று விட்டார்கள். அங்கு கடை வாடகைக்கு விடுவதை பற்றி விசாரித்தார்கள். கடையின் ஓனரும், அட்வான்ஸ் ஒரு லட்சம் வாடகை 20,000 என்றார். பின் வானதி- பாண்டியன் இருவரும் கெஞ்சி கேட்டதால் வாடகையை பத்தாயிரம் என்று குறைத்துக் கொண்டார். பின் வானதி- பாண்டியன் இருவரும் மெடிக்கல் ஷாப்பை பற்றிய அக்கம் பக்கத்தில் விசாரித்தார்கள். அதற்குப்பின் வீட்டுக்கு வந்த வானதி, மெடிக்கல் ஷாப் பார்த்த விஷயத்தை தன்னுடைய அப்பாவிடம் சொல்லி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கேட்டார்.
அய்யனார் துணை:
வீட்டில் உள்ள எல்லோருமே முடியாது என்று சொன்னார்கள். வானதி, நீங்கள் எனக்காக இந்த உதவி செய்தாக வேண்டும். பாண்டியன் எனக்காக ரொம்ப கஷ்டப்படுகிறான். நீங்கள் இது செய்து தான் ஆக வேண்டும் என்று ஆர்டர் போட்டு விட்டு சென்றார். இன்னொரு பக்கம் நிலா- சோழன் இருவரும் மனோகர் ரிசப்ஷன் ஏற்பாடு செய்ய இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். ஆனால், நிலா அதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார். நடேசன், சேரன் எல்லோருமே சொல்வதால் நிலா ரிசப்ஷனுக்கு ஒத்துக் கொள்ள வைத்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வானதி, தன்னுடைய அப்பா அம்மாவிடம் பணம் கேட்டு பேசிய விஷயத்தைப் பற்றி சொல்கிறார். பாண்டியன், அவர்களும் உனக்காக எவ்வளவோ செலவு செய்து விட்டார்கள். நீ இன்னும் அவர்களை கஷ்டப்படுத்தாதே. நகை கொடுத்தால் அதை வைத்து நீ கடனை வாங்கு. அதற்கு பின் அந்த நகையையும் நீயே மீட்டுக் கொடு என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். பாண்டியன் சொன்ன அறிவுறுத்தலின்படி வானதி ஒத்துக் கொள்கிறார். பின் இதைப் பற்றி வானதி தன்னுடைய அப்பா, அம்மாவிடமும் சொல்கிறார். இன்னொரு பக்கம் நிலா, தன்னுடைய குடும்பத்தை பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
சோழனும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். பின் அய்யனார் குடும்பத்தில் எல்லோருமே கிளம்பி ரிசப்ஷனுக்காக சென்னை செல்கிறார்கள். அங்கு நிலா, தன்னுடைய அம்மா அண்ணி உடன் சேர்ந்து புடவை எடுக்க போகிறார். சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோரையுமே அலைத்துக் கொண்டு மனோகர் செல்கிறார். அவர்கள், துணிக்கடை பெரிதாக இருப்பதாகவும், விலை எல்லாம் அதிகமாக இருப்பதை பற்றி எல்லாருமே வாயை பிளந்து பேசிக்கொள்கிறார்கள். இது எல்லாம் பார்த்து மனோகருக்கு கடுப்பாகிறது. அது மட்டும் இல்லாமல் சோழனின் குடும்பத்தை ரொம்ப ஏளனமாகவும் கேவலமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது அறியாமல் சோழன் குடும்பம் துணிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.