மனோகர் செய்த ஏற்பாடு,நிலா-சோழன் எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை
மனோகர் ஏற்பாடு செய்யும் வரவேற்பு விழா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா- சோழனை ரூமுக்குள் அனுப்பி வைத்தார்கள். ஆனால் பாண்டியன், பல்லவன் மட்டும் சோழன் வெளியே வந்து விடுவான் என்று கிண்டல் செய்தார்கள். ரூமுக்குள் சோழன் ஏசி எல்லாம் வாங்கி வைத்திருந்தார். அதை பார்த்து நிலாவிற்கு சந்தோஷமாக இருக்கிறது. பின் இருவரும் ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டார்கள். சோழன், நிலாவின் தோள் மீது பயந்து கொண்டே கை போட்டார். ஆனால், நிலா எந்த மறுப்பும் சொல்லாமல் சோழனின் மீது சாய்ந்து கொண்டார்.
பின் இருவருமே தங்களுடைய வாழ்க்கையை தொடங்கினார்கள். நிலா- சோழன் இருவரும் சந்தோசமாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். மறுநாள் காலையில் சோழன் வெளியே வந்து தன்னுடைய சகோதரர்களிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலா-சோழன் இருவரும் சேர்ந்து வாழ்வதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். நிலாவும் வெட்கத்தில் வெளியே வர தயங்கிக் கொண்டிருந்தார். பின் சோழன் தான் நிலாவை வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.
அய்யனார் துணை:
வீட்டில் எல்லோருமே வழக்கமாக அவர்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நிலா, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இப்படித்தான் இருக்கணும் என்று நிறைய கண்டிஷன் எல்லாம் போட்டார். அது மட்டும் இல்லாமல் நடேசன் குடித்து வந்து ஆட்டம் போட்டிருந்தார். நிலா, இனிமேல் நீங்க குடிக்க கூடாது. உங்கள் உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு மருமகள் போலவே நடந்து கொண்டார். இதை பார்த்து சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதற்குப்பின் வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் எல்லோருக்கும் நிலா பிரித்துக் கொடுத்தார். எல்லோரும் பரபரப்பாக தங்களுடைய வேலைகள் எல்லாம் செய்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, தனக்கு வேலை இருப்பதாக சொல்லி சோழனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே அவரவர்கள் வேலையை பார்த்தார்கள். பின் பாண்டியன் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்து வானதியின் அப்பா, வானதி மெடிக்கல் ஷாப் வைத்து தர சொல்லி கட்டாயப்படுத்தும் விஷயத்தை எல்லாம் சொல்லி புலம்பினார். பாண்டியனும் நான் பேசிக்கொள்கிறேன் என்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். அதற்குப்பின் வானதி கடைக்கு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது நியூஸ் பேப்பரில் மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு கடை வாடைக்கு கிடைக்கும் விஷயத்தைப் பற்றி வானதி இடம் பாண்டியன் சொல்கிறார். பின் இருவருமே சேர்ந்து அந்த கடையை பார்க்க கிளம்புகிறார்கள். இன்னொரு பக்கம் நிலா-சோழன் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது போன் செய்த மனோகர், இருவருக்குமே வீட்டில் சிம்பிளாக ரிசப்ஷன் வைக்க இருக்கிறேன். மாப்பிள்ளை அழைத்துக் கொண்டு வந்து விடு என்று சொல்கிறார். நிலா, அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிடுகிறார். பின் சோழனும் முதலில் ரிசப்ஷன் வேண்டாம் என்று மறுக்கிறார். இருந்தாலும் நிலாவின் அப்பா கட்டாயப்படுத்தியதால் ஒத்துக் கொள்கிறார். ஆனால், இதில் நிலாவிற்கு விருப்பமே இல்லை