நடேசன் சொன்ன விஷயத்தால் பதறி போகும் குடும்பம், மனம் மாறுவாரா நிலா - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 23/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், எதற்காக விவாகரத்தை கேட்கிறாய்? நிலாவின் மனதை மாற்றி இருவரும் சேர்ந்து வாழுங்கள் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கடைக்கு ஆட்கள் யாரும் வராததால் வானதி, நிலாவின் ராசியால் தான் இப்படி நடக்கிறது என்று ஏளனமாக பேசி இருந்தார். உடனே அந்த சமயம் பார்த்து வண்டிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் வானதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் வெளியே செல்வதற்கு வீட்டிற்கு வந்து தயாராகினார். சேரன் பொய் சொல்லி விட்டு வெளியே போனார். சந்தேகப்பட்ட சோழன், அண்ணன் பொய் சொல்லி விட்டு சந்தாவை தான் பார்க்கப் போனார். நாம் அண்ணனை பின்தொடர்ந்து போகலாம் என்று பல்லவனை அழைத்துக் கொண்டு போனார். சோழன் சொன்னது போலவே சேரன், சந்தா வீட்டிற்கு தான் போனார். அங்கு சேரன்-சந்தா இருவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றார்கள்.

அய்யனார் துணை:

இதை ஒளிந்து கொண்டு பல்லவன்- சோழன் பார்த்தார்கள். பின் தன்னுடைய அண்ணன் சந்தோஷமாக ரொமான்டிக் செய்வதை பார்த்து இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் சந்தா, சேரன் இருவரும் கோயிலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா வீட்டிற்கு வந்தார். நடேசனை நிலா நலம் விசாரித்தார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா வீட்டிற்கு வந்ததால் நடேசன் அவருக்கு டீ எல்லாம் வைத்துக் கொடுக்கிறார். பின் நிலா கையில் அடிபட்டிருப்பதை அறிந்த நடேசன், பதறி போகிறார். பின் நடேசன், நிலா கையில் அடிபட்ட இடத்திற்கு மருந்து வைக்கிறார். அதற்குப்பின் சேரன் வீட்டுக்கு வருகிறார். வழக்கம் போல சோழன்- பல்லவன் இருவரும் மாறி மாறி சேரனிடம் கேள்வி கேட்கிறார்கள். சேரனும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ஒரு கட்டத்தில் பல்லவன், சோழன் இருவரும் சேரன், சந்தாவுடன் ஊர் சுற்றியதை சொல்லி விடுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இதனால் வெட்கத்தில் சேரன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். தம்பிகள் எல்லோருமே சேர்ந்து சேரனை கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் நடேசன், நிலாவின் கையில் அடிபட்ட விஷயத்தை வீட்டில் சொல்கிறார். சேரன், பல்லவன், சோழன் எல்லோருமே பதறிப் போகிறார்கள். சோழன் ரொம்பவே வருத்தப்படுகிறார். பின் சேரன், இனிமேல் நிலாவை நீயே வேலைக்கு அழைத்து செல் என்று சோழனுக்கு ஆர்டர் போடுகிறார். இது எல்லாம் பார்த்து நிலாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full