வீட்டிற்கு வந்த பல்லவன் அம்மா, கோபத்தில் கொந்தளித்த நடேசன் - பரபரப்பில் அய்யனார் துணை

By subhashini · 16/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் எல்லோருமே சமையல் செய்வதற்கு நிலாவிற்காக உதவி செய்தார்கள். சோழனுக்கு எதுவும் செய்ய தெரியவில்லை என்றாலும் திட்டு வாங்கிக் கொண்டு செய்து கொண்டிருந்தார். அதற்குப்பின் ஆபீஸில் ராகவ், நிலாவிற்கு மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்றை தந்தார். அதைக் கேட்டு நிலாவிற்கு ஷாக்காக இருந்தது. பின் ராகவ், நிலாவிடம் வழிந்து பேசுவது நிலாவின் தோழிக்கு தெரிகிறது. ஆனால், இதை நிலா ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொரு பக்கம் சேரன் வேலை செய்யும் இடத்திற்கு வந்து விட்டார்.

அப்போது வந்த சந்தா, சேரனுக்கு காலில் அடிபட்டு இருப்பதை அறிந்து எண்ணெய் போட்டு நீவி விட்டு எமோஷனலாக அழுதார். இதை பார்த்து சேரனுக்கு கஷ்டமாக இருந்தது. பின் இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வேலை செய்யும் இடத்தின் ஓனர் அந்த இடத்தை விற்பதாக சொன்னார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு ஷாக்காக இருக்கிறது. பின் அந்த இடத்தின் ஓனர், இந்த இடத்தை மூன்று லட்சம் கொடுத்து நீயே வாங்கிக்கொள். உனக்கே தந்து விடுகிறேன் என்றார். பாண்டியன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

அய்யனார் துணை:

கடையின் ஓனர், எனக்கு கொஞ்சம் சூழ்நிலை கஷ்டமாக இருக்கிறது. அதனால் லீசுக்கு கொடுத்த பணத்தை மூன்று லட்ச ரூபாயை எனக்கே கொடுத்துவிட்டால் கடையை நீயே எடுத்து நடத்து என்று சொன்னார். பின் பாண்டியன், இதைப் பற்றி வீட்டில் எல்லோரிடமும் சொன்னார். பின் பாண்டியன் இதை பற்றி வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொன்னார். வீட்டில் எல்லோரும், சூப்பரான விஷயம். கடையை நீயே வாங்கிவிடு. எல்லோரும் சேர்ந்து பணத்தை பார்த்துக் கொள்ளலாம். நீ அதை வாங்கும் வேலையை பாரு என்று எல்லாம் சொன்னார்கள்.

சீரியல் ட்ராக்:

பாண்டியனுமே சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் பாண்டியன் கிளம்பி வெளியே போனவுடன் நிலா, வீட்டில் உள்ள மற்றவர்களிடம் பாண்டியன் கடை ஆரம்பிக்கும் விஷயம் பற்றி கேட்டார். பின் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பணத்தை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார்கள். பல்லவன், தன்னிடம் இருந்த ஒரு மோதிரத்தை கொடுத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே எப்படியாவது பாண்டியனுக்கு அந்த கடையை வாங்கி தர வேண்டும் என்று மும்முரமாக இருந்தார்கள்.

https://youtu.be/MGAWJoeTfnI?si=KE2aTryxObH6g4oQ

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பல்லவனின் அம்மாவை நேரில் பார்த்து சோழன்-நிலா இருவரும் பேசுகிறார்கள். பின் பல்லவனின் அம்மாவை இருவரும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். சேரன், பாண்டியன் எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள். ஆனால் நடேசன், பல்லவன் அம்மாவை பயங்கரமாக திட்டி வெளியே போக சொல்கிறார். இருந்தாலும் நடேசன் பேச்சை யாரும் கேட்கவில்லை. பல்லவன் அம்மாவை வீட்டிற்குள் அழைத்து வருகிறார்கள். நடேசன், எவ்வளவு பிரச்சனை சந்திக்க போகிறீர்கள் என்று புரியவில்லை. நிறைய அனுபவிப்பீர்கள் என்று திட்டுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full