நடேசன் குடும்பத்தின் மீது கொடுத்த போலீஸ் புகார், வெடிக்கும் கலவரம் - விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 12/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நிலாவை டார்சல் செய்தால் அவ்வளவு தான் என்று ராகவை அடித்தார். ராகவ், போலீஸ் அழைக்கிறேன் என்றார். சோழன் கோபப்பட்டு ராகவை வெளுத்து வாங்கினார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சோழன், நிலாவிடம் பேசி இருந்தார். நிலா மீண்டும் ராகவ் சொன்ன விஷயத்தை பற்றி எமோஷனலாக பேசி இருந்தார். சோழன், நான் கோபத்தில் ராகவை அடித்து விட்டேன் என்றார். இதை கேட்டு நிலா சந்தோஷப்பட்டார். சேரன், நான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டார்.

சோழனும் தன் அண்ணன் செய்த தவறை மன்னித்து விட்டார். ஆனால், நிலா மட்டும் கோபத்தில் இருந்தார். சேரன் எவ்வளவு மன்னிப்பு கேட்டும் நிலா மனம் இறங்கவில்லை. கடைசியில் சேரன் கையெடுத்து கும்பிட்டு
எமோஷனலாக கதறி அழுதார். உடனே நிலா, நானும் கோபத்தில் திட்டி விட்டேன் என்று இருவருமே சமாதானமாகி பழையபடி அண்ணன்- தங்கையாக மாறிவிட்டார்கள். அதற்குப்பின் ரூமுக்குள் பாம்பு வந்ததால் நிலா பயத்தில் கத்தினார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி போய் பார்த்தார்கள். ஒரு வழியாக பாம்பை துரத்தி விட்டார்கள்.

அய்யனார் துணை:

வீடு முழுக்க ஓட்டைகள் இருப்பதால் பாம்பு வருகிறது என்று வீட்டை சரி செய்ய நினைத்தார்கள். அதற்குப்பின் சோழன்- நிலா இருவரும் கிளம்பி போனார்கள். அப்போது சோழன்,ராகவ் ஏதாவது தொல்லை செய்யப் போகிறான். அங்கே வேலை செய்யனுமா என்றார். நிலா, எனக்கு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் முக்கியம். பிரச்சினையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதுவும் ராகவிடம் சண்டை போட வேண்டாம் என்றார். அதற்குப்பின் வீட்டை சரி செய்யும் வேலையை சேரன், சோழன், பாண்டியன் மூவரும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது போன் செய்த வானதியிடம் பாண்டியன் பாம்பு வந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். பொறாமையில் வானதி, நிலாவை திட்டினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேரன், சோழன், பாண்டியன் மூவருமே வீட்டு வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவ சந்தா, அனிஷ் இருவரும் வருகிறார்கள். சந்தா, நடேசன் இடம் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். பின் வேலையும் மும்முரமாக நடக்கிறது. அந்த சமயம் வந்த நடேசன் அண்ணா, தங்கை இருவரும் பிரச்சனை செய்கிறார்கள். நடேசன் அவர்களை திட்டி அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ஆபீஸிற்கு வந்ததாக நிலாவிடம் ராகவ் ரொம்ப கோபமாக வேலையை சீக்கிரம் முடிக்க சொல்கிறார். பின் நிலா, தன் தோழியிடம் வேறு ஒரு இடத்தில் வேலைக்கு ரெடி பண்ணி தர சொல்லி கேட்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் நடேசன் அண்ணன்- தங்கை இருவரும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார்கள். நடேசன் வீட்டிற்கு வந்த போலீஸ், இங்கு எந்த வேலையும் செய்யக்கூடாது வெளியில் கிளம்புங்கள் என்று சொல்கிறார். சேரன் எவ்வளவோ கெஞ்சியுமே நடேசன் அண்ணன், தங்கை மனம் மாறவில்லை. இதனால் நடேசனுக்கும், அவருடைய தங்கை-அண்ணனுக்கும் இடையே கலவரம் வெடிக்கிறது. கோபத்தில் போலீஸ், நடேசன் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார்கள். வீட்டிற்கு சீல் வைப்பதாகவும் சொல்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full