குடும்பத்திற்காக நடேசன் செய்த விஷயம், சந்தேகப்படும் நிலா - விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காலையில் பல்லவன் அம்மா மீண்டும் போன் பேசுவதை நிலா கவனித்தார். உடனே பல்லவன் அம்மா சமாளிக்கிறார். பின் பல்லவனின் அம்மாவை பற்றி சோழன் சொன்னதை வைத்து நிலா நினைத்து பார்த்தார். பின் நிலா, நீங்கள் யாருடன் இருந்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார். ஆனால் பல்லவனின் அம்மா பொய் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் நிலாவிற்கு சந்தேகம் வந்தது.
நடேசன் வீட்டிற்கு திரும்பி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே எங்கு போனீர்கள்? ஏன் வீட்டிற்கு இரவு வரவில்லை என்று கேட்டார்கள். அதற்கு பல்லவன் அம்மாவும் கேள்வி கேட்டார். உடனே கோபப்பட்ட நடேசன், என்னை கேள்வி கேட்பதற்கு நீ யார்? ஒழுங்கு மரியாதையாக வீட்டை விட்டு போ. உன்னால்தான் நான் வீட்டிற்கு வரவில்லை என்று வழக்கம் போல பல்லவன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பல்லவன் அம்மாவிற்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன் கடை வாங்குவது குறித்து சேரன் கேட்டார்.
அய்யனார் துணை:
அதற்கு பாண்டியன், என்ன செய்வது என்று புரியவில்லை என்றார். பின் சேரன், தன்னால் முடிந்த தொகையை பாண்டியனிடம் கொடுத்தார். சோழன், தன் ஓனரிடம் வாங்கிய பணத்தை பாண்டியன் இடம் கொடுத்தார். உடனே நிலா, ஒரு பேப்பரில் 60,000 என்று எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். பல்லவன், உங்களுக்கு பணம் ரெடி பண்ண தான் அண்ணி இரண்டு நாட்களாக தூங்காமல் எக்ஸ்ட்ரா வேலை செய்து சம்பாதித்தார் என்றார். இதைக் கேட்டு பாண்டியன் எமோஷனல் ஆகி அழுதார். இந்த பணத்தை எல்லாம் பார்த்து பல்லவனின் அம்மா திட்டம் போட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் கொடுத்த பணத்தை எண்ணி பார்த்தார்கள். மூன்று லட்சத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் குறைவாக இருக்கிறது. இதை கேட்ட நடேசன், தன்னிடம் இருந்த பணத்தை கொடுக்கிறார். பின் நடேசன், பத்தாயிரத்தை கொடுத்துவிட்டு கடைக்கு ஓனராகு என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்து பாண்டியனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவர்கள் பணத்தை வைத்திருப்பதை பார்த்த பல்லவன் அம்மா கோமலு, தன்னுடைய கணவருக்கு போன் செய்து தகவலை சொல்கிறார். இதையெல்லாம் நிலா கேட்டு விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி மீண்டும் விசாரிக்கிறார். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் திட்டிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னுடைய வீட்டில் எல்லோரும் பணத்தை ஏற்பாடு செய்து தந்த விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு வானதி, அப்போ நான் பணம் தரவில்லை என்று குத்தி காண்பிக்கிறாயா? என்றெல்லாம் நக்கல் அடித்து தெனாவட்டாக பேசுகிறார்.
பாண்டியன், சந்தோசமான செய்தியை பேச தான் அழைத்தேன் என்று சொல்கிறார். வானதி, இதற்கு தான் கூப்பிட்டாயா என்று கோபப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.