பல்லவன் யார் என்பதை போட்டுடைத்த நடேசன், அதிர்ச்சியில் உறைந்த நிலா - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவுமே பல்லவனுக்காக டான்ஸ் எல்லாம் ஆடி பாட்டு பாடினார். அதற்குப்பின் பல்லவன், தான் செய்த தவறை உணர்ந்து நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். நிலாவுமே பல்லவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார். இதையெல்லாம் பார்த்த சேரன், நிலா போன ஜென்மத்தில் அம்மாவாக இருந்திருப்பார் என்று சொன்னார். இதைக் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பானது. தயவுசெய்து தங்கை என்று கூட சொல்லிவிடு அம்மா என்று என்னையும் அழைக்க வைக்காதே என்று சேரனை திட்டி விட்டு சென்றார்.
அதற்குப்பின் நிலா, பல்லவன் அம்மாவை பார்த்து விடுகிறார். நிலாவை பார்த்தவுடன் பல்லவன் அம்மாவும் தப்பித்து ஓட பார்த்தார். இருந்தும் நிலா அவரை பிடித்து விட்டார். பின் நிலா, பல்லவனை விட்டு ஏன் வந்தீர்கள்? என்றெல்லாம் கேட்டார். பல்லவன் அம்மா, ஆமாம் அவர்தான் உடைய கணவர். அவருக்காக தான் பல்லவனை விட்டு சென்றேன். எங்களுக்கு கடன் பிரச்சினை. அதனால் தான் பணத்தை திருட பார்த்தேன் என்றார். நிலா, நடேசன் உங்கள் மீது ஏன் கோபப்படுகிறார்? என்றார். பல்லவன் அம்மா, எதுவாக இருந்தாலும் அவரிடம் கேட்டுக் கொள் என்றார்.
அய்யனார் துணை:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் பல்லவனை அம்மா, பல்லவன் என் மகன் தான். நடேசன் அவனுடைய அப்பா கிடையாது என்று சொல்கிறார். இதனால் நிலாவிற்கு பயங்கர குழப்பம் வருகிறது. பல்லவன் அம்மா, இனிமேல் எதுவாக இருந்தாலும் அந்த ஆளிடம் கேட்டுக் கொள் என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பின் நிலா வீட்டிற்கு வந்து நடேசனை அழைத்துக் கொண்டு வெளியே செல்கிறார். பின் கோயிலுக்கு சென்ற நிலா,
பல்லவன் உங்கள் மகன் கிடையாதா? பல்லவன் அம்மாவிற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். நடேசன் எந்த பதிலும் சொல்ல முடியாமல் மறுக்கிறார்.
இன்றைய எபிசோட்:
கடைசியில் நிலா கட்டாயப்படுத்தியதால் நடேசன் உண்மையை சொல்கிறார். நான் வெளியில் வேலைக்கு போயிட்டு வீட்டிற்கு வர மாச கணக்கு ஆகும். அதனால் போகும் இடங்களில் எல்லாம் வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் ஹோட்டல்களை பார்த்து வைத்துக் கொள்வேன். அப்படி குஜராத்தில் ஒரு ஓட்டலில் இருந்தவர்தான் பல்லவன் அம்மா. அவருடைய கணவர் எனக்கு நன்றாக பழக்கம். அவர் திடீர் என்று ஒரு நாள் இறந்து விட்டார். அப்போது பல்லவன் கைக்குழந்தை. அங்கு ஒரு நபர் தன்னை கல்யாணம் செய்துக்கொள் என்று தினம் டார்ச்சர் செய்வதால் பல்லவன் அம்மா என்னிடம் உதவி கேட்டார்.
சீரியல் ட்ராக்:
அதனால் நானும் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தேன். அவன் மீண்டும் வந்தவுடன் பல்லவன் அம்மா சொல்லாமல் கொள்ளாமல் குழந்தையை என்னிடம் விட்டு கிளம்பி போய் விட்டாள். இப்போது அந்த ஆளுடன் தான் அவள் சுத்தி கொண்டு இருக்கிறார். எனக்கும் அந்த பெண்ணும் கல்யாணம் ஆகல. அவனுக்கு பல்லவன் பெயர் வைத்ததே நான் தான். அவன் எல்லோரிடமும் சந்தோஷமாக அண்ணன் தம்பியாக பழகிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த உண்மை தெரிந்தால் உடைந்து போய் விடுவான். தயவுசெய்து வெளியில் யாரிடமும் இந்த உண்மையை சொல்லாதே. அவன் என்னை வெறுத்தாலும் நான் தான் அப்பா என்று சொல்கிறார். இதைக் கேட்டு நிலா ரொம்பவே எமோஷனலாகிறார். இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் சேரன் கேட்டு விடுகிறார்.