நடேசன் செய்த வேலையால் பிரச்சனையில் சிக்கிய சகோதரர்கள் - பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நான் தான் தெரியாமல் இவர்கள் விஷயத்தில் தலையிட்டேன். சாரி என்று சொல்ல, சோழன் ஆறுதல் சொன்னார். அதற்குப்பின் பாண்டியனை சந்தித்த வானதி, நீ உன் குடும்பத்தை அனுப்பி என்னிடம் பேச வைத்து கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாயா? நிலா-சோழன் இருவரும் பேசியதை எல்லாம் நக்கலாக பேசி வானதி வம்பு இழுத்தார். பாண்டியனுமே பதிலுக்கு வானதியை திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டார்.
சேரன், சந்தவுடன் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த பாண்டியன், வானதியிடம் எதற்காக பொய் பேசினீர்கள்? என்று கேட்டார். சோழன், நீ ரொம்ப சோகத்தில் இருந்தாய். அதனால் தான் நானும் நிலவும் பேச போனோம் என்றார். பாண்டியன், நான் தான் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னேன் தானே, அதற்குப் பிறகும் எதற்காக பேசினீர்கள்? என்று சொல்லி வாக்குவாதம் அதிகம் ஆகிறது. ஒரு கட்டத்தில் பாண்டியன், சோழனை அடித்தார். பின் இருவருமே பயங்கரமாக அடித்து சண்டை போட்டுக் கொண்டார்கள்.
அய்யனார் துணை:
அப்போது அங்கு வந்து நிலா, சண்டையை நிறுத்தி உங்கள் விஷயத்தில் தலையிட்டது தவறுதான் என்று பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து சோழனை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து பாண்டியன், நிலாவிடம் மன்னிப்பு கேட்டார். நிலா அமைதியாக இருந்தார். அப்போது நடேசன், உங்கள் எல்லோருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன். யாரும் எங்கும் போகக்கூடாது. வீட்டிலேயே இருங்கள் என்று சொல்லி விட்டு சென்றார். ஒரு இடத்தில், நடேசன் ஒரு டெம்போ வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அதை பார்த்து சோழன், பாண்டியன், சேரன், நிலா எல்லோருமே சாக் ஆனார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நடேசன், என்னுடைய புது வண்டி
இதுதான். வண்டி எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்? சகோதரர்கள் நான்கு பேருமே எப்படி வாங்கினீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்கள். நடேசன், உன் அம்மாவின் நகையை வைத்து தான் நான் இந்த வண்டியை வாங்கினேன் என்று சொல்கிறார். இதனால் சோழன், பாண்டியன் எல்லோரும் நடேசனை திட்டுகிறார்கள். உடனே நடேசன், மீதி 4 லட்சம் பணத்தை நீங்கள் நான்கு பேரும் தான் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வீட்டை விட்டு காலி பண்ணுங்கள் என்று சொல்கிறார். நான்கு பேருமே பணம் கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
வண்டி கொடுத்தவர், நான்கு பேர் இடமும் பணத்தைக் கேட்டு நிற்கிறார்கள். சேரன், ஒரு மாதம் கால அவகாசம் கேட்கிறார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் நாங்கள் வேற ஏதாவது முடிவெடுப்போம் என்று வண்டி கொடுத்தவர்கள் மிரட்டி விட்டு செல்கிறார்கள். நடேசன், ஒழுங்கு மரியாதையாக பணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்கிறார். நிலா, இப்ப இருக்கும் சூழலில் இதெல்லாம் தேவையில்லை. எதற்காக இப்படி செய்வீர்கள் என்று கேட்கிறார். நடேசன், எல்லாம் தெரிந்துதான் செய்கிறேன் என்று சொல்கிறார்.
சகோதரர்கள் நான்கு பேருமே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வானதி வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதற்கான ஏற்பாடு செய்கிறார்கள். வானதி, சீக்கிரம் என்னுடைய திருமணம் நடக்கணும் என்று சொல்கிறார். பின் விவாகரத்து வழக்கு நடக்க இருப்பதால் நிலா- சோழன் இருவரும் வக்கீலை சந்தித்து பேசி விட்டு வருகிறார்கள்