வீட்டுக்கு வந்த சேரனை வெளுத்து வாங்கிய நடேசன், அதிர்ச்சியில் குடும்பம் - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், நான்தான் ஜாதகம் எழுதிட்டு வந்தேன். அது பொய்யான ஜாதகம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று தன்னுடைய அண்ணனை சமாதானம் செய்ய பார்த்தார். ஆனால், சோழன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சமாதானம் செய்யப் பார்த்தார்கள். ஆனால், சேரன் கேட்கவே இல்லை இடிந்து போய் உட்கார்ந்தார்.
சேரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார்கள். ஆனால், சேரன் தூங்கவில்லை. அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தார். அதற்குப்பின் சேரன், தன் தம்பிகள் தூங்கியவுடன் எமோஷனலாக ரொம்ப கதறி அழுதார். மறுநாள் காலையில் வீட்டில் சேரன் இல்லை. வீடு முழுக்க சேரனை எல்லோருமே தேடினார்கள். அப்போது பல்லவன், சேரன் எழுதி வைத்த கடிதத்தை கொடுத்தார்.
அய்யனார் துணை:
அதில் சேரன், என்னால் யாருடைய வாழ்க்கையும் கெட வேண்டாம். நான் வீட்டை விட்டுப் போகிறேன். எல்லோரும் சந்தோஷமாக இருங்கள். என்னை பற்றி யாரும் கவலை பட வேண்டாம் என்றார். இதைக் கேட்டு நிலா, சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோருமே எமோஷனலாக கதறி அழுதார்கள். பின் எல்லோரும் ஒவ்வொரு பக்கம் சென்று தேடினார்கள். ஆனால், எங்குமே சேரன் கிடைக்கவில்லை. சேரன் வேலை செய்யும் இடத்தில் எல்லாம் சென்று விசாரித்தார்கள். அங்கேயுமே அவர் இல்லை.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசொட்டில் எங்கு தேடியும் சேரன் கிடைக்கவில்லை என்று அவருடைய தம்பிகள் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். நடேசன் எல்லா இடத்திலும் தேடிப் பார்க்கிறார். ஆனால், சேரன் இல்லை. சோழன் ரொம்பவே வருத்தப்படுகிறார். அதற்குப்பின் சோழன்- நிலா இருவருமே போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சேரன் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார்கள். அதற்குப் பின் சோழன் தன் அண்ணனை நினைத்து ரொம்பவே எமோஷனலாக கதறி அழுகிறார். நிலா, அவருக்கு ஆறுதல் சொல்லி பார்க்கிறா.ர் இருந்தாலுமே சோழன் கேட்கவில்லை.
https://www.youtube.com/watch?v=pCmigqYYVP0
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சேரன் வீட்டுக்கு வரவில்லை என்று பல்லவன், பாண்டியன் எல்லோருமே வருத்தமாக இருக்கிறார்கள். அப்போது சோழன், சேரனை அழைத்து வருகிறார். சேரனை பார்த்தவுடன் எல்லோரும் சந்தோஷப்பட்டு விசாரிக்கிறார்கள். அப்போது வந்த நடேசன், சேரனை அடித்து விட்டு, நான் என்னுடைய ரெண்டு மனைவிகளை கொன்று விட்டேன் என்று இந்த ஊரெல்லாம் சொல்லியது. ஆனால், எனக்கு தான் உண்மை என்னவென்று தெரியும். அதற்கு நான் வருத்தப்பட்டு வீட்டை விட்டு போனதில்லை. ஒரு ஜோசியர் சொன்னதற்காக இப்படி செய்வாயா? என்று திட்டி விட்டு செல்கிறார்.