கடைக்கு பாண்டியன் வைத்த பெயர் என்ன தெரியுமா? கோபத்தில் வானதி - அய்யனார் துணை

By subhashini · 16/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நீங்களும் ஒரு பெண்ணை காதலியுங்கள். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள் என்று கிண்டல் அடித்தார். சோழன், இப்ப அதற்கு மட்டும்தான் குறைச்சல் என்று புலம்பி கொண்டிருந்தார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு நிலா- சோழன் இருவரும் வந்து விட்டார்கள். அப்போது வானதி கொடுத்த கிப்ட் பார்த்து சோழன் வழக்கம் போல கிண்டல் செய்கிறார். நிலா வேண்டாம் என்று சொல்லியும் சோழன் கேட்காமல் கேலி செய்து கொண்டிருந்தார். வானதியின் முகம் மாறிவிட்டது.

நிலா- சோழன் இருவரும் ரோட்டில் நடந்து பேசிக்கொண்டு சென்றார்கள். அப்போது சோழன், சேரன்-பாண்டியன் காதலைப் பற்றி ரொம்ப புலம்பி கொண்டிருந்தார். நிலா, நீங்களும் காதலிக்க வேண்டியது தானே என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. பின் சோழன், உங்கள் காதலைப் பற்றி சொல்லுங்கள் என்றார். அதற்கு நிலா, நான் இன்னும் யாரும் காதலிக்கவில்லை. ஆனால், சீக்கிரமாகவே காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றார்.

அய்யனார் துணை:

இதைக் கேட்டு சோழனுக்கு ஷாக் ஆனது. அதற்கு பின் வீட்டில் நடேசன் பனியில் படுத்திருப்பதால் அவருக்கு உடம்பு முடியாமல் போகிறது. பின் நிலா, அவரைத் திட்டி உள்ளே தூங்க வைத்தார்.
நடேசன், நிலா மாதிரி ஒரு பெண் இந்த வீட்டிற்கு வந்ததால் தான் வீடு வீடாகவே இருக்கிறது. சோழன் ஒழுங்காக நிலாவுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழியை பார்க்க சொல் என்று சேரனிடம் அறிவுரை சொன்னார். மறுநாள் காலையில் பாண்டியன் கடை திறப்பு விழாவிற்கு வீட்டில் உள்ள எல்லாருமே தயாராகி சென்றார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே கிளம்பி கடைக்கு வருகிறார்கள். கடையை பாண்டியன் ரொம்ப அழகாக தயார் செய்து வைத்திருக்கிறார். பின் கடைக்கு சேரன் மெக்கானிக் ஷாப் என்று பெயர் வைத்து இருக்கிறார் பாண்டியன். அதை பார்த்து நிலா- சோழன் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். பின் சேரனை அழைத்து வந்து கடையின் பெயரை காண்பிக்கிறார்கள். அதை பார்த்தவுடன் சேரன் எமோஷனாக கண்கலங்கி விடுகிறார். பின் சேரன், எதற்காக என் பெயரை வைத்தாய்? அப்பா, அம்மா, பல்லவன் பெயரை வைத்திருக்கலாம் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பாண்டியன், எங்களை சின்ன வயதில் இருந்து வளர்த்தது நீங்கள் தான். நாங்கள் இப்படி இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் என்று சொல்கிறார். வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து வானதி வருகிறார். கடைக்கு தன் அண்ணன் பெயரை வைத்திருப்பதை பார்த்து கோபப்படுகிறார். பின் அதை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் வானதி அமைதியாகவே இருக்கிறார். அதற்குப்பின் சந்தா, அனீஸ் இருவரும் கடைக்கு வருகிறார்கள். சந்தாவை பார்த்து சேரன் ரொம்பவே வெட்கப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full