சேரனின் நிலைமையை நினைத்து நிலா சொன்ன வார்த்தை, சோழன் எடுத்த முடிவு - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், எனக்கு கல்யாணம் நடந்தால் தான் பாண்டி கல்யாணம் செய்து கொள்வான் என்று வானதியிடம் சொல்லி இருக்கான். அதனால் தான் இந்த ஏற்பாடு செய்தேன் என்றார். இதைக் கேட்டு பாண்டியனுக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப் பற்றி வானதியிடம் பாண்டியன் கேட்டார். அதற்கு வானதி, எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். இதனால் கோபத்தில் பாண்டியன், வானதியை திட்டிக் கொண்டிருந்தார்.
பாண்டியன், என் அண்ணனுக்கு திருமணம் நடக்கும் வரை நம்முடைய கல்யாணம் நடக்காது. நான் நினைக்கும் போது தான் உன்னை கல்யாணம் செய்து கொள்வேன். உன் வீட்டில் பிரச்சனை என்றால் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டி விட்டார். இதைக் கேட்டு வானதியின் அம்மாவும் பயங்கரமாக கோபப்பட்டு பேசி இருந்தார். வேதனையில் வானதி அழுது கொண்டே உள்ளே சென்று விட்டார். இன்னொரு பக்கம் சேரன், அனீஸ் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அனீஸ், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடைய தங்கையை திருமணம் செய்து கொள்வீர்களா? இதற்கு முன்னாடியும் நான் இதைப் பற்றி கேட்டிருக்கிறேன்.
அய்யனார் துணை:
நீங்கள் தான் சிரித்துக்கொண்ட எதுவும் சொல்லவில்லை என்றார். உடனே வெட்க்கப்பட்டு சந்தா உள்ளே சென்று விட்டார். சந்தாவுக்கும் தன்மீது விருப்பம் இருப்பதை தெரிந்த சேரனுக்குமே சந்தோசமாக இருக்கிறது. பின் சேரன், சந்தா தன்னுடன் பேசியது நினைவுகளை நினைத்து பார்த்து கொண்டு வீட்டிற்கு வந்தார். இன்னொரு பக்கம் சேரன், எங்கு சென்றிருப்பார்? என்று வீட்டில் உள்ள எல்லோரும் புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து சேரன், சந்தோஷமாக சிரித்துக்கொண்டே வருவதைப் பார்த்து யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் சேரன், சந்தா மிதுள்ள காதலால் சிரித்துக்கொண்டே இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருக்குமே குழப்பமாக இருக்கிறது. பின் நன்றாக இருக்கிறீர்களா? என்று விசாரிக்கிறார்கள். ஆனால், சேரன் ஒன்றுமே இல்லை. சாப்பிட்டு தூங்குங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் நிலா, சோழனை தனியாக அழைத்து பேச கூப்பிடுகிறார். சோழன், நிலா தன்னிடம் காதலை சொல்லி சந்தோஷமாக பேச போகிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டு ரூமுக்குள் போகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது நிலா, போன்ற முறை சேரன் அண்ணன் எங்கேயோ சென்றுவிட்டார். இந்த முறை யாரும் தூங்காமல் சேரன் அண்ணனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு சோழனுக்கு கடுப்பாகிறது. பின் இதைப் பற்றி சோழன் தன்னுடைய மற்ற இரண்டு தம்பிகளிடம் சொல்கிறார். அவர்களுமே தன் அண்ணனை பார்த்துக் கொள்வதற்கு சம்மதிக்கிறார்கள். ஆனால் சேரன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.