சேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க மும்முரமாக இறங்கிய நிலா, பதறிய குடும்பம் - அய்யனார் துணை

By subhashini · 2/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதியின் வீட்டிற்கு வந்த பாண்டியன், வானதிக்கு ஒன்றென்றால் நான் கேட்பேன் என்றார். பின் வீட்டில் எல்லோருமே வானதியை கண்ட மணிக்கு பேசினார்கள். அதற்கு வானதி, நான் இங்குதான் இருப்பேன். பாண்டியனை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லி ரூமுக்குள் சென்று விட்டார். இன்னொரு பக்கம் சேரன் வீட்டில் எல்லோருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது வந்த பாண்டியன், வானதியை வீட்டில் விட்டேன். அவள் படிப்பு முடியட்டும் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார்.

நேற்று எபிசோட்டில் நிலா, என்ன காரணத்தினால் பாண்டியன் திருமணம் வேண்டாம்? என்று சொன்னார். எல்லா ஆண்களும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் உடனே திருமணம் செய்து கொள்வார்கள். நீங்களும் அதைத்தான் பண்ணுவீர்கள் என்று கேட்டார். அதற்கு சோழன், அண்ணாவுடைய திருமணம் தான். அவருடைய திருமணம் நடக்காமல் இருப்பது பாண்டியனுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதைக் கேட்டு நிலா, பாண்டியனின் செயலை நினைத்து சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் வானதியின் வீட்டிற்கு போலீஸ் வந்தது. அப்போது வானதி வீட்டில் எல்லோருமே பதறினார்கள்.

அய்யனார் துணை:

வானதி, நான் தான் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். என்னை என் வீட்டில் எல்லோருமே அடித்துக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றார். உடனே வானதியின் பெற்றோர்கள் அவர் காதலிக்கும் விஷயத்தை சொன்னார்கள். வானதி, அப்படி எல்லாம் இல்லை. நான் படிக்க நினைக்கிறேன் என்று தன்னுடைய பெற்றோர்கள் மீது திருப்பி விட்டார். இதனால் போலீஸ், வானதிக்கு பிரச்சனை என்றால் உங்களை தூக்கி உள்ளே வைத்து விடுவேன் என்று மிரட்டினார்கள். இதனால் வானதியின் பெற்றோர்கள் அமைதியாகி விட்டார்கள். பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி வீட்டில் நடந்ததை எல்லாம் சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், வானதி வீட்டில் நடந்ததை சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார். வானதி தைரியமாக போலீசில் புகார் அளித்ததை நினைத்து எல்லோருமே பெருமையாக பேசுகிறார்கள். அப்போது நிலா, நானும் அது மாதிரி செய்திருக்கலாம் என்று சொல்கிறார். சோழன், நடக்காத வரை சந்தோஷம் என்று உள்ளுக்குள் நினைக்கிறார். அதற்குப்பின் சேரனுக்கு திருமணம் செய்வது பற்றி நிலா, நடேசன் இடம் பேசுகிறார். ஆனால், அவர் அதைப் பற்றி பெரிதாக கவலை கொள்ளவே இல்லை.

சீரியல் ட்ராக்:

பின் பாண்டியன், சோழன், பல்லவன் மூவருமே ஜாலியாக பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது சேரன் கல்யாணத்தை பற்றி நிலா பேசுகிறார். அவர்களுமே அமைதியாக இருக்கிறார்கள். பின் பொண்ணு பார்க்கும் விஷயத்தில் தீவிரமாக இறங்க சொல்கிறார். அதற்குப்பின் ரோட்டில் சேரன் பெண்களுடன் கதை பேசி கொண்டு காய்கறி வாங்குவதை பார்த்து சோழன் திட்டுகிறார். இன்னொரு பக்கம் பல்லவன், நிலா இருவருமே பஸ் ஸ்டாண்டில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் பல்லவனை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நிலா, பல்லவனிடம் விசாரிக்கிறார். அத்ற்கு பல்லவன், எனக்கு எதுவும் தெரியாது என்று சமாளிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full