சோழனை கதிகலங்க வைக்க நிலா சொன்ன விஷயம், காயத்ரி நிலை என்ன? அய்யனார் துணை

By subhashini · 4/12/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சோழன் செய்தது தவறு தான். நீ எதையும் யோசிக்காதே என்றெல்லாம் அறிவுரை சொல்லி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். பின் இந்த விஷயத்தை எல்லாம் பல்லவன் நிலாவிற்கு போன் செய்து சொன்னார். கோபத்தில் நிலா, தேவையில்லாத வேலை செய்தால் அனுபவித்து தான் ஆகணும். சோழன் அவஸ்தைப்படட்டும் என்று திட்டி போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி இருவரும் போனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வானதி வழக்கம் போல் பாண்டியனை வம்பு இழுத்தார்.

சோழன் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தன்னுடைய தரப்பு நியாயத்தை பாண்டியனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வானதி அங்கு வந்து விட்டார். பின் சோழன்-காயத்ரி லவ்வை பற்றி கேட்டு வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோரும் அவரவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டிற்கு வந்த காயத்ரி நண்பர்கள், உங்களுக்கு திருமணம் ஆனதை ஏமாத்தி காதலித்தீர்களா? அவள் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் உன்னை சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் சோழனை மிரட்டினார்கள்.

அய்யனார் துணை:

உடனே சேரன், பாண்டியன் எல்லோரும் அவர்களை அனுப்பி வைத்தார்கள். பின் சேரன், சோழன் செய்தது தவறு என்று திட்டிக் கொண்டிருந்தார். கோபத்தில் சோழன், நான் என்ன தவறு செய்தேன். இது பொய்யான திருமணம் தானே. விவாகரத்து வாங்கிக் கொண்டு நிலா சென்று விடுவார். இந்த கல்யாணத்தை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. நான் ஒரு பெண்ணுடன் பேசியதில் என்ன தவறு. நான் அந்த பெண்ணை காதலிக்கவில்லை. தோழியாக தான் நான் பழகினேன் என்றெல்லாம் சொன்னார். நிலா, நீங்கள் சொல்வது உண்மைதான். இது போலியான கல்யாணம் தான். நீங்கள் காயத்திரி உடன் பேசுங்கள், பழகுங்கள், அவளை காதலியுங்கள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்வதால் சோழன் ஷாக் ஆகி நின்றார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நிலா, நமக்கு சீக்கிரமாகவே விவாகரத்து கிடைக்க போகிறது. நீங்கள் காயத்ரியை கல்யாணம் செய்து கொள்ளுங்கள். அவள் ரொம்ப கஷ்டப்படுவாள். இந்த பிரச்சனை எல்லாம் என்னால் தானே நடக்கிறது. நானே காயத்ரியிடம் நேரில் சென்று நடந்ததை எல்லாம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். உங்கள் இருவரையும் நானே சேர்த்து வைக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார். பதறிப்போன சோழன், அதெல்லாம் தேவையில்லை என்று சொல்கிறார். இருந்தாலுமே கேட்காமல் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு காயத்ரி வீட்டிற்கு போகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் சோழன், நான் காயத்ரியை காதலிக்கவே இல்லை. நிலாவை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் செய்தேன். எப்படியாவது நிலாவிடம் சொல்லி காயத்ரியை கூப்பிட்டு வர வேண்டாம் என்று சொல்லுங்கள் என்கிறார். உடனே சேரன், பாண்டியன் இருவரும் நிலா சொல்வது தான் சரி. நிலா விவாகரத்து வாங்கிக் கொண்டு இந்த வீட்டை விட்டு போகட்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்லவன், உண்மையாலுமே காயத்ரியை வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்களா? என்று கேட்கிறார். அதற்கு நிலா, நான் பைத்தியமா? அவரை வெறுப்பேற்ற தான் இப்படி எல்லாம் சொன்னேன் என்கிறார். கடைசியில் சோழன், தயவுசெய்து நிலாவிடம் எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் என்றெல்லாம் கெஞ்சி கதறுகிறார். இருந்தாலும் சேரன் கேட்கவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full