நிலா சொன்ன விஷயத்தை கேட்டு ஷாக்கான சோழன், பதறிக்கொண்டு வீட்டுக்கு வந்த வானதி - அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியன் எல்லோருமே வீட்டை சுத்தம் செய்து தயாராகிறார்கள். சேரன், நிலாவிற்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார். இதையெல்லாம் கேட்டு சோழனுக்கு பயங்கர கடுப்பாகிறது. ரூமுக்குள் சென்று தான் செய்த தவறை நினைத்து சோழன் ரொம்பவே வருத்தப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சோழன் கெஞ்சி கதறினார். ஆனால் யாருமே கேட்கவில்லை.
நிலா எடுத்து சொல்லி புரிய வைத்ததால் காயத்ரியும் மனம் மாறி விட்டார். பின் நிலா, இனிமேல் காதலிப்பதற்கு முன்பு அந்த நபரை பற்றி தெளிவாக தெரிந்து கொள். அதற்கு பிறகு காதலிக்க ஆரம்பி என்றெல்லாம் அறிவுரை சொன்னார். காயத்ரி நண்பர்களுடன் பேசிவிட்டு நிலா, பல்லவன் இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். இன்னொரு பக்கம் சோழன், நிலா வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று தப்பிக்க பார்க்கிறார். வாசலிலேயே கொடுவா வைத்துக்கொண்டு அய்யனார் போல நடேசன் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அய்யனார் துணை:
பாண்டியன், சேரன் இருவருமே சோழனை வெளியே விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்கள். பின் நிலா வந்தது அறிந்து சோழன் பதறி அடித்துக் கொண்டு காய்த்ரி வந்து இருக்கிறாளா? என்றார். ஆனால், காயத்ரி வரவில்லை. இருந்தாலுமே பயத்தில் சோழன் உள்ளே ரூமிற்குள் சென்று விட்டார். பின் சோழன் புலம்பியது எல்லாம் வீடியோவாக எடுத்து வைத்திருந்ததை பாண்டியன் நிலாவிடம் காண்பித்தார். அதை பார்த்து நிலாவிற்கு சிரித்தார். அதற்கு பின் நிலா, சோழனிடம் பேசுவதற்கு ரூமுக்குள் போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சோழன், நான் தெரியாமல் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். காயத்ரியை அழைத்து கொண்டு வரவில்லை தானே என்று கேட்கிறார். அதற்கு நிலா, நாம் இருவரும் வெளியே போகலாம் வாருங்கள் என்று சொல்கிறார். பின் சேரன், நிலா சொன்னதால் தான் உன்னை அப்படி பேசினோம் என்று சொல்கிறார். அதற்குப்பின் நிலா, சோழன் இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலா, நான் பல்லவன் அம்மாவை பார்த்தேன். அவர்களைப் பற்றி விசாரியுங்கள் என்று சொல்கிறார் .
சீரியல் ட்ராக்:
அதற்கு சோழன், அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லையே என்று சொல்கிறார். நிலா, கண்டிப்பாக அவர்கள் தான். இந்த உண்மையை கண்டுபிடிக்கணும் என்று சொல்கிறார். பின் சோழன், நான் செய்தது பெரிய தவறுதான். என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று தான் செய்த தவறுக்கு வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் போன் எடுக்கவில்லை என்று வானதி
வீட்டிற்கு வந்து விடுகிறார். பின் நடந்ததை எல்லாம் பாண்டியன், பல்லவன் இருவரும் சொல்கிறார்கள். அதற்குப்பின் பாண்டியன்- வானதி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது