பல்லவன் யார் ? உறவுகளை சீர்குலைக்கும் அந்த உண்மை வெளிவருமா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன், தன் அம்மா வீட்டை விட்டு போனது நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். நிலா எவ்வளவு ஆறுதல் சொல்லியும் பல்லவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு பின் பல்லவனை கல்லூரியில் விட்டு நிலா- சோழன் இருவரும் வந்தார்கள். அப்போது நிலா, பல்லவனின் அம்மா செய்த வேலை எல்லாம் சொன்னார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக் ஆனது. பின் நிலா- சோழன் இருவருமே பல்லவன் அம்மா இருந்த இடத்திற்கு போனார்கள். ஆனால், அங்கு வீடு பூட்டி கிடக்கிறது. இருவருக்குமே பல்லவன் அம்மா மீது சந்தேகம் இன்னும் அதிகமானது.
இன்னொரு பக்கம் சேரன், பல்லவன் அம்மா வந்ததையும் அவர் திரும்ப மீண்டும் சென்றதையும் பற்றி சந்தாவிடம் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். சந்தா, சேரனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் கடைக்கு வந்த வானதி, பணத்தை ரெடி பண்ணி விட்டாயா? கடைக்கு என்ன பெயர் வைக்க போகிறாய்? என்னிடம் சொல்லவில்லை என்றாலும் வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு பாண்டியன், நல்ல நாள் பார்த்து சொல்கிறேன். கடையின் பெயர் சர்பிரைஸ் என்றார். பின் சேரன், சோழன் எல்லோருமே பணத்தை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்று முதலாளி இடம் கொடுத்தார்கள்.
அய்யனார் துணை:
சேரன் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கடையின் ஓனரிடம் கொடுத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இனி இந்த கடையின் ஓனர் பாண்டியன் தான் என்று சொன்னார்கள். பின் நிலாவும் அந்த இடத்திற்கு வந்து விட்டார். நிலா, பாண்டியனுக்கு வாழ்த்து சொல்லி கடையில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் இன்னும் கடை டெவலப் ஆகும் என்றெல்லாம் ஐடியா சொன்னார். இது எல்லாம் யாருக்கும் தெரியாமல் ஓரமாக நின்ற பார்த்த வானதி பயங்கரமாக கோபப்பட்டார். பாண்டியன் தன்னை அழைக்காததால் வானதி அங்கிருந்து சென்று விட்டார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் எல்லோருமே சேர்ந்து ஹோட்டலுக்கு சாப்பிட போனார்கள். ஆனால், பல்லவன் மட்டும் தன் அம்மா போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். எல்லோருமே பல்லவனுக்கு ஆறுதல் சொன்னார்கள். அதற்குப்பின் ஹோட்டலில் இருந்து நிலா, நடேசனுக்கு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தார். பின் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி விசாரித்தார். வழக்கம்போல் நடேசன் கோபப்பட்டார். பின் பல்லவன், உங்களுக்கு என் மீது உண்மையாகவே பாசம் இல்லை. என் அம்மா காணாமல் போனாலும் நீங்கள் அந்த ஆளுக்கு தான் சப்போர்ட் செய்கிறீர்கள் என்றெல்லாம் உண்மை தெரியாமல் நிலாவை திட்டினார்.
https://www.youtube.com/watch?v=-XTzFwu0qzM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நிலா, பல்லவன் அப்பா ஏன் உங்க மீது கோபப்படுகிறார். உங்களுக்கு இரண்டாம் கல்யாணம் ஆனதா? என்கிறார். பல்லவன் அம்மா, என் குழந்தையை அவரிடம் விட்டு சென்றால் கோபம் வராதா? என்கிறார். நிலா, பல்லவன் அவர் மகன்
கிடையாதா? என்கிறார். பல்லவன் அம்மா, அந்த ஆளிடம் கேட்டுக் கொள் என்று செல்கிறார். பின் நடேசனை சந்தித்த நிலா, பல்லவன் உங்கள் மகன் இல்லையா? என்று கேட்கிறார். நடேசன், அமைதியாக இருக்கிறார்.