வீட்டை மீட்க போராடும் நிலா, நடேசன் என்ன செய்ய போகிறார்? விறுவிறுப்பில் அய்யனார் துணை

By subhashini · 14/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் அண்ணன்- தங்கை இருவரும் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார்கள். நடேசன் வீட்டிற்கு வந்த போலீஸ், இங்கு எந்த வேலையும் செய்யக்கூடாது வெளியில் கிளம்புங்கள் என்றார். சேரன் எவ்வளவோ கெஞ்சியுமே நடேசன் அண்ணன், தங்கை மனம் மாறவில்லை. இதனால் நடேசனுக்கும், அவருடைய தங்கை-அண்ணனுக்கும் இடையே கலவரம் வெடிக்கிறது. கோபத்தில் போலீஸ், நடேசன் குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார்கள். வீட்டிற்கு சீல் வைப்பதாகவும் சொன்னார்கள்.

நடேசன் அந்த வீட்டை விட்டு வெளியே போக மாட்டேன் என்று பிரச்சனை செய்தார். சோழன், எல்லோரும் அவர்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். இனிமேலும் இங்கு இருப்பது சரி இல்லை என்று சொன்னார். பாண்டியன், சேரன், பல்லவன் எல்லோருமே வருத்தப்பட்டு தங்களுடைய பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஆனால், நடேசன் மட்டும் முடியாது என்று அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அய்யனார் துணை:

அந்த சமயம் வந்த நிலாவிடம் நடந்ததை எல்லாம் சோழன் சொன்னார். பின் நிலாவும் எவ்வளவோ பேசி பார்த்து இருந்தார். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் மொத்த குடும்பமே தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். போலீஸ் வீட்டிற்கு சீல் வைத்து விடுகிறது. கோபத்தில் நடேசன், தன்னுடைய அண்ணனுக்கு மண்ணை தூவி சாபம் விட்டு வந்தார். அதற்குப்பின் ஹோட்டலில் ரூம் எடுத்து நடேசன் குடும்பம் தங்கி கொண்டார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் மொத்த குடும்பமும் தவித்து நிற்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன செய்வது, எங்கு போவது என்று புரியாமல் சேரன் குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நிலா, எங்கு போய் தங்குவது? என்று யோசிக்காமல் அந்த வீட்டை நம்முடையது எப்படி ஆக்குவது என்று யோசியுங்கள். அந்த வீட்டிற்க்கான பத்திரம் இருக்கிறதா? யாருடைய பெயரில் இருக்கிறது என்றெல்லாம் கேட்கிறார். சோழன், எல்லாமே அந்த ஆளுக்கு தான் தெரியும். அவரிடம் கேளுங்கள் என்கிறார். அதற்குப்பின் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

வானதி- பாண்டியன் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சோழனுக்கு கடுப்பாகி திட்டி விடுகிறார்.
அதற்குப்பின் நிலா, இந்த வீடு யார் பெயரில் இருக்கிறது? அதற்கான பத்திரம் யாரிடம் இருக்கு தெரியுமா? என்றெல்லாம் கேட்கிறார். நடேசன், எனக்கு தெரியாது என்று சொல்கிறார். கோபத்தில் நிலா, நடேசனை திட்டி விட்டு நல்ல தகப்பனாக இந்த வீட்டை உங்கள் மகன்களுக்கு கொடுக்கா ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்கிறார். அதற்கு பின் வானதி, பாண்டியனை பார்க்க வந்து விடுகிறார். அதைப் பார்த்து சோழனுக்கு கடுப்பாகிறது. நிலா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full